64MP கேமராவுடன் களமிறங்கும் Motorola எட்ஜ் 30 நியோ.! எப்போது அறிமுகம்?
மோட்டோரோலா நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தரமான Motorola எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ
மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய மோட்டோரோலா போன் ஆனது 6.28-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே அம்சங்கள்
அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்ளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த டிவைஸ் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான கேமரா
மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

தரமான சிப்செட் வசதி
புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனில் நீங்கள் மிகவும் அதிக எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனில் 4020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ்செய்ய முடியும்.

பட்ஜெட் விலை
இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பட்ஜெட் விலையில் மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications