சிறந்த தரத்தில் செம ஸ்டைலான லுக்கில் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 நியோ.!

|

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறங்கள்

நிறங்கள்

அதேபோல் இந்த போன் அக்வா ஃபோம், பிளாக் ஓனிக்ஸ், ஐஸ் பேலஸ், Very Peri நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

சூப்பர் கேமரா

சூப்பர் கேமரா

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

வால்யூம் ராக்கர்ஸ்

வால்யூம் ராக்கர்ஸ்

குறிப்பாக இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்துயுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

Realme 9i 5G போனை வாங்கலாமா? வேண்டாமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய குயிக் ரெவியூ.!Realme 9i 5G போனை வாங்கலாமா? வேண்டாமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய குயிக் ரெவியூ.!

சக்தி வாய்ந்த சிப்செட் வசதி

சக்தி வாய்ந்த சிப்செட் வசதி

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனில் சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

8ஜிபி ரேம்

8ஜிபி ரேம்

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256ஜி ஸ்டோரேஜ்,4020 எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு அறிமுகம் செய்த மோட்டோ ஜி42 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

இது ஸ்மார்ட்போனா இல்ல கம்ப்யூட்டரா? பூரிப்படைய வைத்த Samsung Fold 4!இது ஸ்மார்ட்போனா இல்ல கம்ப்யூட்டரா? பூரிப்படைய வைத்த Samsung Fold 4!

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் செயல்திறன் மிக அருமையாகஇருக்கும். அதேபோல் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் இதில் உள்ளன.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரிஉள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ போன்.

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: 91mobiles

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Neo is coming soon with a very stylish look: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X