இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

|

மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனமானது ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ், 50 எம்பி டிரிபிள் கேமராக்கள் உடன் தொடங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனத்தின் அதிகாரப்பூர்வ விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ், 50 எம்பி டிரிபிள் கேமராக்கள்

ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ், 50 எம்பி டிரிபிள் கேமராக்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனமானது ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ், 50 எம்பி டிரிபிள் கேமராக்கள் உடன் தொடங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனத்தின் அதிகாரப்பூர்வ விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து பார்க்கலாம். மோட்டோரோலா எட்ஜ்30 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி, 4020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்புப்படி பார்க்கையில், இது சுமார் ரூ.36,265 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கைக்கு பிடிக்க சௌகரியமான வடிவமைப்பு

கைக்கு பிடிக்க சௌகரியமான வடிவமைப்பு

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சாதனத்துக்கு மாற்றாக மலிவு விலை சாதனமாக இது வருகிறது. செல்பி ஸ்னாப்பருக்கென சென்டர் பொசிஷனில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி இருக்கிறது. எல்இடி ஃபிளாஷ் வசதியோடு பின்புறத்தில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிக்கு என இந்த சாதனத்தில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. பின் பேனலுக்கு என மிகச்சிறிய கிரேடியன்ட் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனமானது வட்டமான மூலைகளைக் கொண்டிருக்கிறது. கைகளில் இந்த சாதனத்தை பிடிக்கும் போது சௌகரியமான அனுபத்தை இது வழங்குகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி வசதி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 4020 எம்ஏஎச் பேட்டரி 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனத்தின் அடிப்படை விலை குறித்து பார்க்கையில், இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.36,268 என தொடங்குகிறது. இந்த சாதனம் முதலில் ஐரோப்பாவில் வெளிவரத் தொடங்கும், பின் வாரங்களில் ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெளிவரும் என கூறப்படுகிறது.

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, எச்டிஆர் 10+, 10 பிட் கலர், டிசிஐ பி3 கலர் ஸ்பேஸ் மற்றும் சென்டர் பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச் ஹோல் கட்அவுட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு, 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்டில் கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வருகிறது.

இரட்டை 50எம்பி கேமரா என மூன்று கேமராக்கள்

இரட்டை 50எம்பி கேமரா என மூன்று கேமராக்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 4020 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரையில், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை லென்ஸ் ஓஐஎஸ், 50 எம்பி அல்ட்ரா வைட் யூனிட் ஆகியவை கொண்டிருக்கிறது. மூன்றாவது கேமராவாக 2 எம்பி டெப்த் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Launched with Dual 50MP Camera, 144HZ Refresh Rate Display and More: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X