மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

|

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட், அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் வரும் மே 19-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ் 30

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.29,999-விலையில் விற்பனைக்கு வரும்.

நீங்கள் மர்மமாக இறந்தால் டுவிட்டரை எனக்கு கொடுப்பீர்களா?- டுவிட்டர் பயனருக்கு மஸ்க் சொன்ன நீங்கள் மர்மமாக இறந்தால் டுவிட்டரை எனக்கு கொடுப்பீர்களா?- டுவிட்டர் பயனருக்கு மஸ்க் சொன்ன "ஓகே": பதறிய தாய்!

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ் 30 ஸ்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

தம்பி படிச்சது 10-வது தான்: இந்தியா முழுவதும் 1352 சைபர் திருட்டு வழக்குகள்: வசமாக சிக்கியது எப்படி தெரியுமா?தம்பி படிச்சது 10-வது தான்: இந்தியா முழுவதும் 1352 சைபர் திருட்டு வழக்குகள்: வசமாக சிக்கியது எப்படி தெரியுமா?

லா எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனில்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 778G+ சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ் 30

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனில்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 4020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

iPhone 13: மீண்டும் நீங்கள் எதிர்பார்க்காத விலைகுறைப்பு: புதிய விலை மற்றும் கூடுதல் சலுகை விபரம் இது தான்..iPhone 13: மீண்டும் நீங்கள் எதிர்பார்க்காத விலைகுறைப்பு: புதிய விலை மற்றும் கூடுதல் சலுகை விபரம் இது தான்..

, வைஃபை 802.11ஏஎக்ஸ், ப்ளூ

5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 155 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் Meteor Grayமற்றும் Aurora Green நிறங்களில் வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Edge 30 launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X