Motorola Edge 30 Fusion பட்ஜெட் விலையில் அறிமுகம்.! விற்பனை இந்த நாளில் தான்.! நீங்க ரெடியா?

|

மோட்டோரோலா எட்ஜ் 30 சீரிஸ் கீழ் மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்தியாவில் 2 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Motorola Edge 30 Fusion மற்றும் Motorola Edge 30 Ultra என்ற 2 மாடல்களை தான் நிறுவனம் இப்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. Ultra என்பது நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாகும். Fusion என்பது நிறுவனத்தின் மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன் மாடலாகும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் என்ற மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விபரங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் 144Hz டிஸ்பிளேவுடன், 50MP பிரைமரி கேமரா மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மாடலில் 200MP கேமரா வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு நிகரான போன்

மலிவு விலையில் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு நிகரான போன்

Motorola Edge 30 Fusion சாதனம் ஃபிளாக்ஷிப் போனிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பேக் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது. மேலும் முக்கியமாக, தற்போதைய ஜெனரல் ஃபிளாக்ஷிப் போன்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவு விலையில் வாங்கக் கிடைக்கிறது என்பதனால் இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் மவுசு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் விலை என்ன?

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் விலை என்ன?

சரி, இப்போது இந்த போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களைப் பார்க்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 39,999 என்று விலையில் வருகிறது. இந்த சாதனம் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இந்த போன் காஸ்மிக் கிரே மற்றும் சோலார் கோல்ட் வண்ணங்களில் கிடைக்கும். ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுடன் ரூ.3,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

Motorola Edge 30 Fusion சிறப்பம்சம்

Motorola Edge 30 Fusion சிறப்பம்சம்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் 6.55' இன்ச் கொண்ட முழு எச்டி+ POLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144Hz உடன் கூடிய HDR10+ ஆதரவை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 888+ 5G சிப்செட் உடன் 13 5G பேண்டுகளுடன் இயங்கும் ஆதரவை கொண்டுள்ளது. இது 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

கேமராவை பொறுத்தவரை, இது 50MP பிரைமரி கேமராவுடன் 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த சாதனம் 32MP செல்ஃபி ஸ்னாப்பரை கொண்டுள்ளது. இந்த சாதனம் 4400mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 68W டர்போ பவர் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

Motorola Edge 30 Fusion ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற அம்சங்கள் என்ன?

Motorola Edge 30 Fusion ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற அம்சங்கள் என்ன?

Motorola Edge 30 Fusion டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 மற்றும் 14 அப்டேட் உத்தரவாதத்துடன் , மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் பற்றி பார்க்கையில், இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், IP52, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, Wi-Fi 6E, மொபைலுக்கான ThinkShield, Dolby Atmos, GPS மற்றும் NFC உடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola Edge 30 Fusion Mid Range Smartphone With Snapdragon 888+ Launched In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X