இதுவா, அதுவா? பிரமாண்டமாக 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய Motorola!

|

மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 தொடரின் கீழ் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா, எட்ஜ் 30 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 30 நியோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் என்பதை உறுதியாக கூறலாம். காரணம் இந்த ஸ்மார்ட்போனில் பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை இயக்கும் Snapdragon 8+ Gen 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. பிற இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo ஆகிய பிற இரண்டு ஸ்மார்ட்போன்களும் ப்ரீமியம் ரகம் இல்லை என குறிப்பிட முடியாது. காரணம் இதன் விலை அப்படி இருக்கிறது. எட்ஜ் 30 அல்ட்ரா அளவிலான ப்ரீமியம் அம்சங்கள் இதில் இல்லை என்றாலும் பொதுவான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான அம்சங்கள் இதில் இருக்கிறது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான அம்சங்கள்

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான அம்சங்கள்

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo ஆகிய பிற இரண்டு ஸ்மார்ட்போன்களும் ப்ரீமியம் ரகம் இல்லை என குறிப்பிட முடியாது. காரணம் இதன் விலை அப்படி இருக்கிறது.

எட்ஜ் 30 அல்ட்ரா அளவிலான ப்ரீமியம் அம்சங்கள் இதில் இல்லை என்றாலும் பொதுவான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான அம்சங்கள் இதில் இருக்கிறது.

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo விலை இதுதான்

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo விலை இதுதான்

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo ஆகிய ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எட்ஜ் 30 ஃப்யூஷன் சோலார் கோல்ட், நெப்ட்யூன் ப்ளூ, அரோரா ஒயிட் மற்றும் காஸ்மிக் க்ரே என நான்கு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை 599 யூரோக்கள் (தோராயமாக ரூ. 48,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எட்ஜ் 30 நியோ ஆனது வெரி பெரி, ப்ளாக் ஓனிக்ஸ், ஐஸ் பேலஸ் மற்றும் அக்வா ஃபோம் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என குறிப்பிடலாம். காரணம் இதன் விலை 369 யூரோக்கள் (தோராயமாக ரூ.29,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் சிறப்பம்சங்கள்

Motorola Edge 30 Fusion ஆனது 6.55 இன்ச் P-OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 1100 நிட்ஸ் பிரகாசம், பி3 வண்ண வரம்பு, எச்டிஆர் 10+ ஆதரவு உள்ளிட்ட நன்மைகள் இதில் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் ஃபேஸ் அன்லாக் அம்சம் மற்றும் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது.

50 எம்பி பிரதான கேமரா ஆதரவு

50 எம்பி பிரதான கேமரா ஆதரவு

எட்ஜ் 30 ஃப்யூஷன் ஆனது ஸ்னாப்டிராகன் 888+ SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 50 எம்பி பிரதான கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது.

செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த ஸ்மார்ட்போனானது 4400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

டூயல் சிம் ஆதரவு, 5G, Wi-Fi 802.11ax, ப்ளூடூத் 5.2, GPS, NFC மற்றும் USB-C ஆகிய ஆதரவுகள் இதில் இருக்கிறது.

வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்புக்கு என IP52 மதிப்பீடு மற்றும் Dolby Atmos ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனானது 6.28 இன்ச் P-OLED டிஸ்ப்ளே மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

240Hz டச் விகிதத்துடன், 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

64 எம்பி பிரைமரி கேமரா

64 எம்பி பிரைமரி கேமரா

4020mAh பேட்டரி ஆதரவுடன் கூடிய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு ஆதரவுக்கு என IP52 மதிப்பீடு இதில் இருக்கிறது.

64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா ஆதரவு உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Fusion, Edge 30 Neo launched: Is it Worth to Buy?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X