கொம்பன் இறங்கிட்டான்.. புது Motorola 5ஜி போன்.. 8GB ரேம், OIS 4K 50MP சோனி கேமரா, 5000mAh பேட்டரி, IP69!
மோட்டோரோலா நிறுவனம், தனது மிகவும் பிரபலமான எட்ஜ் சீரிஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், மோட்டோரோலா எட்ஜ் 2026 (Motorola Edge 2026) மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் இது மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதன் மீது ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.
மோட்டோரோலா எட்ஜ் 2026 ஸ்மார்ட்போனின் விலை: அமெரிக்காவில், மோட்டோரோலா எட்ஜ் 2026 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 11 ஆம் தேதி முதல் $599.99 க்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.57,300) க்கு விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏர்த்தி க்ரீன்-கோல்ட் டோன் மற்றும் டெக்ஸ்ச்சர்டு டிவில்-இன்ஸ்பையர்டு ரியர் பேனல் கொண்ட தனித்துவமான பேன்டோன் மார்டினி ஆலிவ் ஃபினிஷில் வெளியாகியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா எட்ஜ் 2026 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- HDR10+ சான்றிதழ்
- 5,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.3-இன்ச் OLED 1.5K டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- மீடியாடெக்கின் 4என்எம் டைமென்சிட்டி 7450 சிப்செட் (MediaTek 4nm Dimensity 7450 chipset)
- 8 ஜிபி LPDDR5X ரேம்
- 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- மூன்று மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியுடன் கூடிய 50MP சோனி LYTIA 710 ப்ரைமரி கேமரா
- மேக்ரோ ஷூட்டராகவும் செயல்படும் 50MP அல்ட்ரா-வைட் கேமரா
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS வசதியுடன் கூடிய 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP செல்பீ கேமரா
- போட்டோ என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் மற்றும் ஆக்சன் ஷாட் போன்ற ஏஐ கேமரா அம்சங்கள்
- 60W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- "சாதாரண" 5000mAh பேட்டரி. ஆனால் வெறும் ஏழு நிமிட வயர்டு சார்ஜிங், ஒரு நாள் முழுவதுமான வழக்கமான பயன்பாட்டிற்கு போதுமான சக்தியை வழங்கும் என்று மோட்டோரோலா கூறுகிறது.
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- கீழே விழுதல் மற்றும் அதிர்ச்சியை தாங்கும் திறனுக்கான MIL-STD-810H சான்றிதழ்
- டால்பி அட்மாஸ் அம்சத்துடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன்-ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
கிஸ்பாட்டின் கருத்து: பல்வேறு வகையான கேமரா அம்சங்கள், கச்சிதமான வடிவமைப்பு மற்றும் நேர்த்தியான ஆண்ட்ராய்டு சாஃப்ட்வேர் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்கள், மோட்டோரோலா எட்ஜ் 2026 ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் ஆன (எதிர்பார்க்கப்படும்) மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ மாடலுக்கு தாராளமாக காத்திருக்கலாம்
ஏனென்றால் இது ஒரு சமநிலையான மிட்-ரேன்ஜ் விலை மாடலாக தெரிகிறது. பிரத்யேக டெலிஃபோட்டோ கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் பொதுவாக அதிக விலை கொண்ட மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது
நீங்கள் தற்போது ஒரு பழைய எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போனை வைத்திருந்தால், இந்த புதிய ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் டிஸ்பிளே மேம்பாடுகள் உங்களை நிச்சயம் கவரக்கூடும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க - முதலில் நமக்கு இந்திய அறிமுகம் குறித்த தகவல் கிடைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications