Home
Mobile

முரட்டு Moto ப்ரோ.. pOLED டிஸ்பிளே.. 5200mAh பேட்டரி.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. மிலிட்டரி கிரேடு மாடல்!

மிலிட்டரி கிரேடு பில்ட் குவாலிட்டி மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன், ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் போன்ற டியூரபிலிட்டி பீச்சர்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 2025 (Motorola Edge 2025) வெளியாகி இருக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5200mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 2025 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும்படி எம்ஐஎல்-810எச் (MIL-810H) சர்டிபிகேஷனை பெற்றுள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 1.5 மீட்டர்கள் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரையில் டியூரபிலிட்டி கொடுக்கும். அதேபோல கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனும் கிடைக்கிறது.

முரட்டு Moto ப்ரோ.. pOLED டிஸ்பிளே.. 5200mAh பேட்டரி.. SONY கேமரா!

மோட்டோரோலா எட்ஜ் 2025 அம்சங்கள் (Motorola Edge 2025 Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, குவாலிட்டி மட்டுமல்லாமல், பர்ஃபாமென்ஸ் பக்கமும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் மட்டுமல்லாமல் ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் பாடியுடன் டிஸ்பிளே கிடைக்கிறது. குவாட் கர்ட்வ் டிசைனில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த கர்வ்ட் டிஸ்பிளேவில் சூப்பர்எச்டி (SHD) ரெசொலூஷன், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 720Hz PWM ஃபிரிகொன்சி மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700சி (SONY LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + மேக்ரோ சப்போர்ட் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

முரட்டு Moto ப்ரோ.. pOLED டிஸ்பிளே.. 5200mAh பேட்டரி.. SONY கேமரா!

10 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. இதில் 3X ஆப்டிகல் மற்றும் 30X சூப்பர் ஜூம் சப்போர்ட் உள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 2025 போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. குவாட் பிக்சல், ஆட்டோ போகஸ், ஓஐஎஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. நைட் விஷன், போட்டோ என்ஹான்ஸ், போட்டோ பூத் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு யுஎஸ்பி பவர் டெலிவரி 3.0 (USB Power Delivery 3.0) சப்போர்ட் வருகிறது. மேலும், ரேம் பூஸ்ட், மோட்டோ செக்யூர் 5.0 (Moto Secure 5.0), திங்க்சீல்டு மற்றும் ரியல் டைம் கெர்னல் புரொடெக்சன் கிடைக்கிறது.

Take a Poll

பான்டோன் டீப் ஃபாரஸ்ட் (PANTONE Deep Forest) கலர்களில் ஆர்டர் செய்யலாம். இந்த மோட்டோரோலா எட்ஜ் 2025 போனின் விலை ரூ.47,098ஆக இருக்கிறது. இந்த விலை அமெரிக்கா டாலரின் அடிப்படையில் கொடிக்கப்பட்டதாகும். ஏனென்றால், இது அமெரிக்காவில் (US) வெளியாகி இருக்கிறது. ஜூன் 5ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 2025 With Military Grade Protection IP69 Rating Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X