இதுதான் புது மோட்டோரோலா போன்.. 32எம்பி செல்பி கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு மோட்டோரோலா எட்ஜ் 2023 மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். தற்போது மோட்டோரோலா எட்ஜ் 2023 போனின் புகைப்படம் ஆன்லைனில் கசிந்துள்ளது.
அதாவது பிரைஸ்பாபா இணையதளத்தில் மோட்டோரோலா விரைவில் அறிமுகம் செய்ய உள்ள மோட்டோரோலா எட்ஜ் 2023 (Motorola Edge 2023) மாடலின் அம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 போன் ஆனது வளைந்த டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் டூயல் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் மோட்டோரோலா எட்ஜ் 2023 போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கீ உள்ளன. குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் பி-ஒஎல்இடி( P-OLED) ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகம். அதேபோல் இந்த போனின் டிஸ்பிளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் (Dimensity 8020 chipset)வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய மோட்டோரோலா போன் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 போன் வெளிவரும். அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (15W wireless charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் மோட்டோ ஜி54 5ஜி, மோட்டோ ஜி84 5ஜி மற்றும் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரேவுற்பு உள்ளது.
photo courtesy: PriceBaba


Click it and Unblock the Notifications








