Home
Mobile

Motorola-வின் ஸ்டைலான 5G மொபைல்: நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

மோட்டோரோலா நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு
ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 2022 (Motorola Edge (2022)) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 மோட்டோரோலா எட்ஜ் 2022

மோட்டோரோலா எட்ஜ் 2022

குறிப்பாக இந்த போன் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவிலும் மோட்டோரோலா எட்ஜ் 2022போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

வாங்கலாமா? வேண்டாமா?

வாங்கலாமா? வேண்டாமா?

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானால் இதை வாங்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் உள்ளனர். கவலை வேண்டாம், இப்போது மோட்டோரோலா எட்ஜ் 2022 போனின் டிஸ்பிளே, பெர்ஃபார்மென்ஸ், இயங்குதளம், கேமரா, பேட்டரி என அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து பார்ப்போம், பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம்!

 பெரிய டிஸ்பிளே வசதி

பெரிய டிஸ்பிளே வசதி

அதாவது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரியடிஸ்பிளே என்பதால் ஓடிடி-இல் படங்களை பார்ப்பதற்கும், கேமிங் பயன்களுக்கும் மிகவும் அருமையாக பயன்படுத்த இந்த மோட்டோரோலா
ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 1,080×2,400 பிக்சல்ஸ்,144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு எனப் பல
சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் நீங்கள் நினைத்த வேகத்தில் இதன் டிஸ்பிளேவை பயன்படுத்த முடியும். பின்பு
சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன்.

தனித்துவமான பிராசஸர் வசதி

தனித்துவமான பிராசஸர் வசதி

இதுவரை எந்த நிறுவனமும் இப்படியொரு பிராசஸர் வசதியுடன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததில்லை. அதாவது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 2022 போன் மீடியாடெக் Dimensity 1050 பிராசஸர் உடன் 6என்எம் சிப் வசதி உள்ளது.

குறிப்பாக இந்த Dimensity 1050 பிராசஸர் ஆனது உங்களுக்கு மேம்பட்ட வேகத்தை வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களுக்கு இந்தபோன் பயனுள்ள வகையில் இருக்கும்.. இதுதவிர ஆண்ட்ராய்டு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சுருக்கமாக கூறேவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் லென்ஸ்

13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் லென்ஸ்

இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த போன் 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் லென்ஸ் உடன் வெளிவந்துள்ளதால் தரமான படங்களை எடுக்க முடியும். அதேபோல் அனைத்துஇடங்களில் 50எம்பி பிரைமரி சென்சார் கண்டிப்பாக உதவும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடிபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் மாடல்.

அருமையான சார்ஜ்ங் வசதி

அருமையான சார்ஜ்ங் வசதி

மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனில் நாம் எதிர்பார்த்த அனைத்து சார்ஜிங் வசதியும் உள்ளது. அதாவது 30W டர்போபவர் வயர்டுசார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் இந்த புதிய போன் கருப்பு நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 குறைந்த எடை

குறைந்த எடை

மிகவும் ஸ்லிம்மான வடிவமைப்பில் இந்த போன் அறிமுகமானதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் குறைந்த எடையில் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன்.

டூயல் சிம் கிடையாது

டூயல் சிம் கிடையாது

இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஆதரவு இல்லை. அதாவது சிங்கிள் சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் 5ஜி, புளூடூத் 5.2, என்எப்சி, வைஃபை 6 மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தமோட்டோரோலா எட்ஜ் 2022 போன்.

வாங்கலாமா? வேண்டாமா?

வாங்கலாமா? வேண்டாமா?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனின் விலை $499.99 (இந்திய மதிப்பில் ரூ.40,000) ஆக உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஒரு பிளாக்‌ஷிப் பிரீமியம் போன் வாங்க நினைப்பவர்கள் இதை தேர்வு செய்வது நல்லது. அதாவது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 போனை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 2022 Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X