தரமான சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
அண்மையில் மோட்டோரோலா எட்ஜ் 20 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தரமான சிப்செட் வசதியுடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன் நெபுலா ப்ளூ நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.52,000-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அருமையாக பயன்படுத்தலாம். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன்.

இந்த புதிய சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குளத்தை அடிப்படையக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் (2021) மாடல். எனவே இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் (2021) சாதனத்தின் பின்புறம் 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி
செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த தரமான மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன் மாடல்.

5 ஜி, வைஃபை 6 இ,ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன். அதேபோல் 200 கிராம் எடை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் (2021) ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications