இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று (அக்டோபர் 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த
மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு அக்டோபர் 3-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலுக்கு அறிமுக சலுகையும் உள்ளது. அதாவது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,999-ஆக உள்ளது. மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் touch latency, 20:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உளளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 879 சிப்செட் வசதி உடன் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம்108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 190 கிராம் என்று கூறப்படுகிறது. பின்பு Midnight Sky மற்றும் Iridescent Cloud நிறங்களில் இந்த அசத்தலான சாதனம் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications