Home
Mobile

புதிய டியூவல் சிம் போன்: மோட்டோரோலா அறிமுகம்

By Super
புதிய டியூவல் சிம் போன்: மோட்டோரோலா அறிமுகம்
இப்பொழுது மோட்டோரோலா நிறுவனம் விற்பனை சந்தையில் ஒரு புதிய டியூவல் சிம் மொபைல் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்நள்ளது.இது டியூல் சிம் வசதி கொண்டது. இரண்டு சிம் கார்டுகளைப் மிகவும் எளிய முறையில் பயன்படுத்தமுடியும்.

கடந்த வாரத்தில் குறைந்த விலையில் அதிக தொழில் நுட்ப்பம் கொண்ட ஹேண்ட்செட் என்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆனால், மோட்டோரோலாவின் டபிள்யூக்ஸ்-306 என்ற இந்த மாடலில் நெட்வொர்க் முழுமையாகக்கிடைக்கிறது.

இதனால் உங்கள் பேச்சு துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இரண்டு சிம்கார்டு ஸ்லாட்டுகளை 3ஜி சப்போர்டுடன் நீங்கள் பயன்படுத்த முடியும்.

3ஜி நெட்வெர்கை மிகவும் வேகமான அளவில் உங்களால் பெறமுடியும். இதில் கேமரா வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதிக அளவுகொண்ட பிக்செல் கொண்ட கேமரா உள்ளதால் கிளாரிட்டியான புகைப்படங்களை உங்களால் எடுக்கமுடியும்.

அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் எளிய முறையில் உங்களால் பதிவேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.

இதில் அதிக அளவில் மெமரி சப்போர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் நீங்கள் அதிக அளவு செய்திகளை சேமித்துக்கொள்ளமுடியும்.

இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இதில் பொழுதுபோக்கு அம்சமாக மியூசிக் ப்ளேயர்,வீடியோ போன்றவற்றை எளிய முறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியம்.

இந்த மாடல் களர் டிஸ்ப்ளே வசதியையும், WAP 2.0/xHTML வசதியையும் கொண்டுள்ளது.அதோடு நீங்கள் கேட்டு மகிழ எஃப்எம் ரேடியா வசதியும் உள்ளது.இந்த டபிள்யூஎக்ஸ்- 306 மாடல் புளூடூத் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாது யூஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது.கணினியில் இருந்து உங்கள் ஹேண்செட்டிற்கு மிகவும் சுலபமான முறையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம்.

இதில் உள்ள மெமரி ஸப்போர்ட்டை உங்கள் விருப்பம் போல் விரிவுபடுத்திக்கொள்ளவும் முடியும். இது ஒரு பட்ஜெட் வசதி கொண்ட மாடல் என்றும் சொல்லலாம்.

இந்த போன் இந்தியாவில் ரூ.3,500 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X