Home
Mobile

கூடுதல் வசதிகளுடன் மோட்டோ டிராய்டு ரேசர் மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

கூடுதல் வசதிகளுடன் மோட்டோ டிராய்டு ரேசர் மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

பல சிறப்பான மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து கொண்டு இருந்த மோட்டோரோலா நிறுவனம் டிராய்டு ரேசர் மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இது ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பேரட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதனால் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் பற்றி இன்னொரு ஸ்வாரசியமான தகவல்கள் என்னவென்றால் இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஓஎஸ் அப்கிரேட் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் இன்னும் கூடுதல் வசதிகளையும் பெறலாம்.

டிராய்டு ரேசர் மேக்ஸ் ரெட் ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோல்டு தொடுதிரை தொழில் நுட்பம் கொண்ட 4.0 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரையினால் 540 X 960 திரை துல்லியத்தினை பெறலாம். இதில் உள்ள 8 மெகா பிக்ஸல் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்க முடியும்.

16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸமார்ட்போனில் 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியினையும் பெறலாம். 3ஜி, 4ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இதில் புளூடூத், யூஎஸ்பி போன்ற தொழில் நுட்ப வசதிகளின் மூலம் எளிதாக தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் பதிவேற்றத்தினை நிகழ்த்த முடியும்.

மோட்டோரோலா ரேசர் மேக்ஸ் ரெட் ஸ்மார்ட்போனில் சிறந்த அம்சமாக இதன் பேட்டரியினை சொல்லலாம். இதில் 3,300 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 21.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 380 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். தற்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X