அற்புதமான வடிவமைப்பில் மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன்!

நிறைய ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட மோட்டரோலா நிறுவனம் டிராய்டு-4 ஸ்மார்ட்போனை இந்த மாதம் 9-ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட்போனின் உயர்ந்த தொழில் நுட்பங்களை பற்றி அதிகமாக பகிர்ந்து இருக்கிறோம் என்றாலும் மேலோட்டமாக ஒரு பார்வை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் வெர்ஷன் 2.3 ஜின்ஜெர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். சிறந்த முறையில் இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பங்கள் செயல்பட இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ9 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
வடிவமைப்பு என்று வந்தாலே அதன் திரை ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. டிராய்டு-4 ஸ்மார்ட்போனுக்கு இதன் கியூவர்டி கீப்பேட் வசதி ஒரு கம்பீரமான தோற்றத்தை வழங்கும். 12 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் வசதியினை வழங்க இது எல்ஐ-அயான் 1,785 எம்ஏஎச் பேட்டரியை கொண்டது. 204 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் இந்த பேட்டரி தரும்.
16ஜிபி வரை இன்டர்னல் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 32ஜிபி வரை இதன் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ளலாம். இத்தகைய சிறந்த தொழில் நுட்பங்கள் மூலம் அதிக வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கும் இந்த டிராய்டு-4 ஸ்மார்ட்போன் மொபைல் மார்கெட்டில் அதிக வரவேற்பினை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications