Home
Mobile

டிராய்டு-4 மற்றும் சோனி எக்ஸ்பீரியா எஸ்: ஓர் ஒப்பீட்டு அலசல்!

By Super
டிராய்டு-4 மற்றும் சோனி எக்ஸ்பீரியா எஸ்: ஓர் ஒப்பீட்டு அலசல்!

சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா டிராய்டு-4 மற்றும் சோனி எக்ஸ்பீரியா எஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன்கள். எனவே, இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஓர் ஒப்பீட்டு அலசலை இங்கு காணலாம்.

சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 144 கிராம் எடையிலும், மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் 179 கிராம் எடையிலும் வடிவமைக்கப்பட்டு்ள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் 1500 மெகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் கியூவல்காம் எம்எஸ்எம் 8260 பிராசஸரும், மோட்டோ டிராய்டு-4 ஸ்மார்ட்போனில் 1200 மெகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் டி1 ஓஎம்ஏபி4430 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

சோனி எக்பீரியா எஸ் ஸ்மார்ட்போனின் திரை, மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போனின் திரையை விட சற்று பெரிதாக இருக்கும். சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்டது. மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதி கொண்டது. சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பான புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் தரும் என்று நிச்சயமாக சொல்லலாம்.

இதில் 12.1 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோராலா டிராய்டு-4 ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. சோனி எக்ஸபீரியா எஸ் ஸ்மார்ட்போனை விட இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் கேமரா பிக்ஸல் குறைவு என்றாலும், சிறந்த புகைப்படத்தை வழங்கும் தொழில் நுட்பத்தை கொடுக்கும்.

ஆனால் இந்த கேமராவிலும் 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும். 3ஜி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கிறது தான்.

இந்த ஸ்மார்ட்போன்களில் 3ஜி நெட்வொர்க் வசதியை சுலபமாக பெறலாம். ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் சப்போர்ட் செய்யும். 3ஜி வசதி என்று சொன்னவுடன் வாடிக்கையாளர்களின் கவனம் செல்வது பேட்டரியின் மேல் தான்.

சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் எல்ஐ-அயான் 1750 எம்ஏஎச் பேட்டரியையும், மோட்டோ டிராய்டு-4 ஸ்மார்ட்போன் எல்ஐ-அயான் 1785 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டது. இத்தனை வசதிகளையும் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் விலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது இயல்பு தான்.

சோனி எக்ஸபீரியா எஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளிவரவில்லை. ஆனால், மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் ரூ.38,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X