Home
Mobile

புதிய மோட்டோ டிராய்டு, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
புதிய மோட்டோ டிராய்டு, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தேடும் வாடிக்கையாளர்களாக இருந்தால் அதில் நிச்சயம் மோட்டோரோலா டிராய்டு 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி பிரோ டியோஸ் ஸ்மார்ட்போன்களும் வரும். டிராய்டு 4 என்ற ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனமும், கேலக்ஸி ப்ரோ டியோஸ் என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது. இதில் சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிட இருப்பதாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போனில் சிங்கிள் கோர் பிராசஸர் 832 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் வசதியையும் வழங்கும்.

டியூவல் சிம் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போன் இருக்கும்.

டிராய்டு-4 ஸ்மார்ட்போன் ஸ்லைடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதாக டைப் செய்ய இது கியூவர்டி கீப்பேட் வசதியினை பெற்றுள்ளது. கேலக்ஸி ப்ரோ டியோ ஸ்மார்ட்போனும் கியூவர்டி கீப்பேட் மற்றும் தொடுதிரை வசதியினை வழங்குவதாக உள்ளது.

டிராய்டு-4 இஞ்ச் திரை வசதியை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 960 X 540 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் இதன் திரை வசதியை பார்க்கும்பொழுது கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போனின் திரை வசதி சற்று குறைவுதான். இது 2.6 இஞ்ச் திரை வசதியினை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் சிறந்த காட்சியையும் தகவல்களையும் இதில் பார்க்லாம். ஏனெனில் இதில் டிஎப்டி திரை தொழில் நுட்பம் உள்ளது. சாம்சங் ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போன் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தை தரும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களின் விலையுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொழில் நுட்பத்தின் மூலம் பிறரை கவர்ந்து இழுக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், விலையிலும் அனைவரையும் கவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X