Home
Mobile

நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் களமிறங்கிய Motorola Defy.! என்ன விலை?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா டெஃபி ரக்டு ஸ்மார்ட்போன் (Motorola Defy 2021) ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஐரோப்பா மற்றும் லாட்டம் சந்தைகளில் வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்

அதேபோல் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல
வேண்டும் என்றால் மோட்டோரோலா டெஃபி ரக்டு ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஐபி 68 மற்றும் தீவிர நிலைமைகளைத் தாக்குப்பிடிக்கும்இராணுவத் தர சான்றிதழ்களை பெற்று வெளிவந்துள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

த ஸ்மார்ட்போன் பற்றி

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி மோட்டோரோலா நிறுவனம் கூறியது என்னவென்றால், 5அடி வரை 35 நிமிடங்கள் வரை நீரின் கீழ் இருக்கும் தன்மையுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர மணல், தூசி, அழுக்கு, ஈரப்பதம் மற்றும் சால்ட் மிஸ்ட் போன்றவைகளுக்கான எதிர்ப்பையும் பெற்றள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் வைப்ரேஷன் மற்றும் டம்பிள் சோதனைகளையும் கடந்துள்ளது இந்த சாதனம்.

கூறவேண்டும் என்னறால்

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்னறால் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனை சோப்புகள் மற்றும் லேசான கிருமிநாசினிகளால் கூட சலவை செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா டெஃபி ரக்டுஸ்மார்ட்போன்.

ரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா டெஃபி ரக்டு ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.29,000-ஆக உள்ளது. மேலும் கருப்பு மற்றும் ஃபோர்ஜ்டு க்ரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா டெஃபி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா டெஃபி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஒசி
  • ரேம்: 4ஜிபி
  • மெமரி: 64ஜிபி
  • ரியர் கேமரா: 48எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
  • செல்பீ கேமரா: 8எம்பி செல்பீ கேமரா
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
  • விரைவில் ஆண்ட்ராய்டு 11 அணுக கிடைக்கும்
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • வோல்டிஇ, ப்ளூடூத் வி 5, என்.எஃப்.சி
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்

Best Mobiles in India

English summary
Motorola Defy Rugged Smartphone Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X