Home
Mobile

புதிய மோட்டோ, எச்டிசி ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

By Super
புதிய மோட்டோ, எச்டிசி ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

ஸ்மார்ட் மொபைலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. ஏனென்றால், அவற்றின் நவீன தொழில்நுட்ப வசதிகளே இதற்கு காரணம். விலை அதிகமாக இருந்தாலும், வசதிகளால் வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுத்து விடுகின்றன.

அப்படி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தும் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் மோட்டோரோலா டிஃபை ப்ளஸ் மற்றும் எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் ஆகிய மொபைல்களும் இணைந்துள்ளன. இந்த இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மொபைலாகும்.

மோட்டோரோலா டிஃபைப்ளஸ் மொபைல் 118 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. இதனால் எளிதாக கையாளலாம். ஆனால், எச்டிசி சென்சேஷனல் எக்ஸ்எல் மொபைலின் எடை சற்று கூடுதல் என்று கூறலாம். சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் 163 கிராம் எடையை கொண்டுள்ளது.

சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் 4.7 இஞ்ச் அகன்ற திரையை கொண்டிருக்கிறது. மோட்டோரோலா டிஃபைப்ளஸ் 3.7 இஞ்ச் திரை கொண்டது. எச்டிசி மொபைல் 16.8 மில்லியன் கலர்களை சப்போர்ட் செய்கிறது. அதோடு இந்த மொபைல் டிஎப்டி டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது.

மேலும், 3264 X 1024 பிக்ஸல் துல்லியத்தை தர கூடிய 8 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது இந்த மொபைல் 1280 X 1024 பிக்ஸல் துல்லியத்தை கொண்ட செகன்டரி கேமராவையும் கொண்டுள்ளது.

மோட்டோரோலா டிஃபைமொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா 2592 X 1944 பிக்ஸல் அதிக துல்லியத்தை கொடுக்கிறது. இந்த இரண்டு மொபைல்களுமே 3ஜி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்கிறது.

இரண்டு மொபைல்களுக்கும் பிராசஸரில் சிறிய வித்தியாசம் இருக்கிறது. எச்டிசி சென்சேஷனல் எக்ஸ்எல் மொபைலில் எக்ஸ்எல் க்யூவல்காம் எம்எஸ்எம் 8255 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.மோட்டோரோலா டிஃபைப்ளஸ் மொபைல் 1 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டிஐ ஒஎம்ஏபி 3620 பிராசஸரை கொண்டுள்ளது.

எச்டிசி மொபைல் 768 எம்பி சிஸ்டம் மெமரி மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரியையும் வதியையும் வழங்கும். ஆனால் மற்றும் 2ஜிபி வரை இன்டர்னல் மெமரியை வழங்குகிறது.

எச்டிசி சென்சேஷனல் எக்ஸ்எல் மொபைல் 1,600 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும், மோட்டோரோலா டிஃபை ப்ளஸ் மொபைல் லித்தியம் பாலிமர் பேட்டரியையும் பெற்றுள்ளது. எச்டிசி மொபைலில் 8 மணி நேரம் டாக் டைம் வசதியையும் மற்றும் 295 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

அதே போல் மோட்டோரோலா மொபைலிலும் 1,700 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 384 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

எச்டிசி சென்சேஷனல் எக்ஸ்எல் மொபைலின் விலை குறித்த சரியான விலை விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த மொபைல் ரூ.30,000 விலை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைலின் விலையில் பாதிதான் மோட்டோ டிஃபை ப்ளஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X