வெயிட் பண்ணி வாங்க அடுத்த சூப்பர் போன் இதுதானோ? மோட்டோ ஜி 9 பிளஸ் விலை இவ்வளவு தானா?

|

மோட்டோரோலா நிறுவனம் மற்றொரு மோட்டோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. மோட்டோ ஜி 9 பிளஸ் என்ற பெயரில் வரவிருக்கும் நாட்களில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று டெக் டிப்ஸ்டரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை தகவல் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனம் இந்த மாதம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2 ஆம் தேதி, மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகப்படுத்தியது, அதனைத் தொடர்ந்து மோட்டோ ஜி 5 ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகிய போன்களை மோட்டோரோலா நிறுவனம் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மோட்டோ ஜி 9 பிளஸ்

இப்போது, மோட்டோ ஜி 9 பிளஸ் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஸ்டோரில் அதன் விலை பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த சாதனத்தின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை 227.15 யூரோக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 20,0000 ஆகும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது என்பது பட்டியலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!

குவாட் கேமரா அமைப்பு

இருப்பினும், ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை. ஆனால் கொடுக்கப்பட்ட விலையைப் பார்க்கும்பொழுது, ஸ்மார்ட்போன் இடைப்பட்ட ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் ட்ரிபிள் கேமரா அமைப்பு அல்லது குவாட் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜி 9 பிளஸ்

கடந்த ஆண்டு அக்டோபரில் மோட்டோ ஜி 8 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. மேலும் ஜி 9 பிளஸ் அதன் வாரிசாக இருக்க வாய்ப்புள்ளது. மோட்டோ ஜி 9 பிளஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் தெளிவாகவில்லை. மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸின் விலையை நிறுவனம் அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மோட்டோரோலா இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ .16,999-லிருந்து ரூ .17,499 ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola could soon launch Moto G9 Plus, prices leaked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X