Home
Mobile

Google, Samsung வயிற்றில் புளியை கரைக்கும் தகவல்.. ஜூன் 1 அறிமுகமாகும் Motorola போன் தான் அதற்கு காரணம்!

கூகுள் (Google) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைக்கும்படியாக மோட்டோரோலா (Motorola) நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவலொன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், வருகிற 2023 ஜூன் 1 ஆம் தேதி மோட்டோரோலாவின் அறிமுக நிகழ்வு ஒன்று நடக்கவுள்ளது.

இதற்கும் கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் "கவலைகளுக்கும்" என்ன சம்பந்தம் என்று கேட்டால்.. இருக்கிறது, சம்பந்தம் இருக்கிறது. வருகிற ஜூன் 1 ஆம் தேதி ஆம் தேதியன்று மோட்டோரோலாவின் அடுத்த தலைமுறை போல்டிங் ஃபிளிப் ஸ்மார்ட்போன் (Next-gen Folding Flip Smartphone) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold) அறிமுகமாகி முழுதாக 1 மாதம் கூட ஆகிவில்லை. இதற்கிடையில் மோட்டோரோலா நிறுவனம் அதன் அடுத்த ஃபிளிப் போனின் அறிமுகம் ஜூன் 1 ஆம் தேதி நடக்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மோட்டோரோலாவின் புதிய 2023 ஃபிளிப் போன் ஆனது சாம்சங்கின் ஃபிளிப் போன்களுடன் கடுமையாக போட்டியிடும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். அந்நாளில் இரண்டு ஃபிளிப் போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் சிலர் ஊகித்துள்ளனர். ஆனால் அவைகள் வெவ்வேறு மோனிகர்களின் கீழ், அதாவது வெவ்வேறு பெயரின் கீழ் வரும் ஒரே போனாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஜூன் 1 அறிமுகமாகும் Motorola-வின் புதிய போன்!

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சில சந்தைகளில் இது மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) என்று அழைக்கப்படலாம்; மற்ற சந்தைகளில் இது ரேஸர் 2023 (Razr 2023) என பெயரிடப்படலாம். சமீபத்தில் வெளியான லீக் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இது முந்தைய தலைமுறை ஃபிளிப் போன்களை விட மெலிதாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

கூடவே அவுட்டர் ஸ்க்ரீனில் இளஞ்சிவப்பு நிறத்திலான பாடி மற்றும் இரண்டு கேமரா சென்சார்களையும் பார்க்க முடிகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் சமீபத்திய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் கடைசியாக வெளியான ரேஸர் ஃபிளிப் ஃபோனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் இடம்பெற்று இருந்தது. சிப்செட் உடன் சேர்த்து கேமராக்களும் மேம்படுத்தப்படும். நினைவூட்டும் வண்ணம் முந்தைய மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

மோட்டோரோலாவின் ரேஸர் 2023 மாடலின் அறிமுகமானது, மக்கள் மத்தியில் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் வரவேற்பிற்கான சமீபத்திய எடுத்துகாட்டாக இருக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, சமீபத்தில் தான் பிக்சல் ஃபோல்ட் அறிமுகமானது.

முன்னதாக ஒப்போவின் ஃபைண்ட் என் ஃபிளிப் (Oppo Find N Flip) அறிமுகமானது. சாம்சங் நிறுவனம் ஏற்கனவே மூன்று தலைமுறை கேலக்ஸி ஃபிளிப் போன்களை (Samsung Galaxy Flip Phones) அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்னோ (Tecno) நிறுவனம் கூட கடந்த மாதம் அதன் மலிவு விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Confirmed Its Next Gen Flip Smartphone Moto Razr 2023 To Launch on June 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X