ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!

|

மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்தை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அம்சத்தோடு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் வரும் எனவும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடந் வரும் எனவும் கூறப்படுகிறது.

மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன்

மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்திய அறிமுகத்தை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மூலமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்தும் நிறுவனத்தின் தரப்பில் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி குறித்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களும் மூன்று கேமரா அமைப்புகளுடன் வரும் என தெரிவிக்கப்படுவதோடு இதன் சில விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது.

பிளிப்கார்ட்டில் பிரத்யேக வெளியீடு

மோட்டோரோலா இந்தியா மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்களானது பிளிப்கார்ட்டில் பிரத்யேகமாக வெளியிடப்படும் என டுவிட் செய்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பகிர்ந்த படம் குறித்து பார்க்கலாம். டுவிட்டர் பதிவில் இரண்டு ஸ்மார்ட்போன்களின் படங்களும் வெளியாகியுள்ளது. பின்புற பேனல் வடிவமைப்போடு, மூன்று பின்புற கேமரா அமைப்பையும் இந்த புகைப்படம் காட்டுகிறது.

புகைப்படத்தில் மோட்டோரோலா இரண்டு ஸ்மார்ட்போன்களையும் காணலாம். மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது ஆஷ் நிறத்திலும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் சாதனம் நீல நிற பூச்சிலும் வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மூன்று பட்டன்கள் இருக்கிறது. மூன்றாவது பட்டனாக இதில் கூகுள் அசிஸ்டெண்ட் பட்டனும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனானது செல்பி ஷூட்டர் அம்சத்தை மையமாக கொண்டு ஹோல் பஞ்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் செல்பி கேமரா அமைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களும் தடிமனமான பெசல்களுடன் வரும் என கூறப்படுகிறது.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

அதேபோல் கீக்பெஞ்ச் பட்டியலின்படி மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் சாதனமானது 4ஜிபி ரேம் ஆகியவற்றோடு வரும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வரும் எனவும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 20 ஆம் தேதி பிளிப்கார்டில் அறிமுகம்

ஏப்ரல் 20 ஆம் தேதி பிளிப்கார்டில் அறிமுகம்

அதேபோல் ஒப்போ ஜி60 ஸ்மார்ட்போன் குறித்த பிரத்யேக புகைப்படத்தை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 20 ஆம் தேதி பிளிப்கார்டில் அறிமுகமாகும் எனவும் இதில் 108 எம்பி அல்ட்ரா ஹைரெஸ் கேமரா, ஸ்னாப்டிராகன் 732ஜி ப்ராசஸர், 6.8 இன்ச் எச்டிஆர்10 ஆதரவுடன் 120ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வரும் என நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Confirmed its Moto G60, Moto G40 Fusion Launching in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X