Home
Mobile

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றே கூறவேணடும்.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!

இந்த மோட்டோரோலா நிறுவனம் விரைவில் கேப்ரி (Capri) மற்றும் கேப்ரி பிளஸ் (Capri Plus) என்ற இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு போன்களின் தகவல்கள் தற்பொழுது
இணையத்தில் கசிந்துள்ளது.

மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் XT2117 என்ற மாடல் எண்ணுடன் வருகிறது. இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் 720 x 1600 பிக்சல்கள் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும். கேமராவைப் பொறுத்தவரை, மோட்டோரோலா கேப்ரி 48 மெகாபிக்சல் பிரைமரி சாம்சங் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் உடன் வரும்.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!

முன்பக்க கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் சாம்சங் செல்பி கேமராவுடன் வெளியாகும். இந்த போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்புடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறது. மோட்டோரோலா கேப்ரி பிளஸ் XT2129 என்ற மாடல் எண்ணை கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை
ஆதரிக்கும் HD + டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் ஆம்னிவிஷன் டெப்த் அசிஸ்ட் லென்ஸ், 13 மெகாபிக்சல் சாம்சங் சூப்பர்வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றுடன் குவாட் பின்புற அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமெராவும் உள்ளது. இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி என இரண்டு வகைகளில் வர வாய்ப்புள்ளது.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!

இரண்டு ஸ்மார்ட்போன்களும் அண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது. அவை என்எப்சி மற்றும் டூயல் சிம் இணைப்பை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம்
செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்ன விலை பிரிவில் வெளியாகும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Motorola Capri Plus May Launching Soon in India: Here the Price and Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X