இந்திய சந்தையில் கால் பதிக்கும் ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
இந்திய சந்தையில் கால் பதிக்கும் ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன்!

அதிகமான வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஏட்ரிக்ஸ்-2. தொழில் நுட்பத்திலும், வடிவமைப்பிலும் வாடிக்கையாளர்களை நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் எளிதில் கவர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியை கொடுக்கும். ஒரு ஸ்மார்ட்போனுக்கு

பிரம்மிக்க வைக்கும் தோற்றத்தை கொடுப்பதே அதன் வடிவமைப்பு தான்.

அந்த வகையில் ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன் கம்பீரமான தோற்றத்துடன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். அதோடு இந்த ஸ்மார்ட்பனில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது. இதனால் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் இந்த கேமராவின் மூலம் எளிதாக பெறலாம்.

இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளதால், திரையில் எந்தவிதமான கீறல்களும் ஏற்படாமல் பாதுகாக்கும். 2ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி வசதி உள்ளதால் அதிகமான தகவல்களையும் இதில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். 32ஜிபி வரை இதன் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

இன்னொரு முக்கிய தகவலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன் 4ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு பெரிதும் சப்போர்ட் செய்கிறது. பிரவுசிங் வசதியை பெறுவது என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த விருப்பமும் ஏட்ரிக்ஸ் ஸ்மார்ட்போனில் நிறைவேறும்.

அதிக ஆற்றலை கொடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 1,785 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. இதனால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமையும் பெறலாம். ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் இயங்குதளம் எளிதாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸரில் 3டி ஆக்ஸிலரேஷன் தொழில் நுட்பமும் உள்ளது.

இத்தகைய சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.23,000 விலையில் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்