Home
Mobile

Motorola-வின் புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! இதில் ஸ்பெஷல் என்ன இருக்கு?

மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் போனின் சிறப்பம்சம் மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன், 6.8' இன்ச் கொண்ட 2400 x 1080 பிக்சல் தீர்மானம் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 ஜி ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி ஆதரவுடன், 128 ஜிபி சேமிப்பகத்துடன், 4 ஜிபி ரேம் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு சில வேரியண்ட் மாடல்களும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

கேமரா

கேமரா

கேமராவைப் பொறுத்தவரை, மோட்டோ ஜி 9 பிளஸ், குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி 9 பிளஸ் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கொண்ட பஞ்ச் ஹோல் டிஸ்பிளே கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது, மேலும் இதில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கைரேகை ஸ்கேனருடன், மோட்டோ ஜி 9 பிளஸ் புளூடூத் 5.0, வைஃபை, வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது.

விலை

விலை

மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 26,000 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. வெகு விரைவில் இந்த புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவலுக்காகக் காத்திருப்போம்.

Best Mobiles in India

English summary
Motorola Announced New Moto G9 Plus With Snapdragon 730G, 64MP Quad Rear Camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X