என்ன என்ன ஐட்டங்களோ.. ஒரே நேரத்தில் 8 Motorola போன்கள் மீது விலை குறைப்பு.. 5ஜி போன் ரூ.8999 க்கு!
இந்த செப்டம்பர் மாதம் புது ஸ்மார்ட்போன் வாங்க சிறந்த மாதம். பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனை ஆனது செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனைக்கு முன்னதாக, எந்தெந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு விலை குறைப்பு / டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்கிற விவரங்களை பிளிப்கார்ட் பகிர்ந்துள்ளது.
ஒருவேளை நீங்கள் பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளிப்கார்ட் பிளாக் மெம்பர் ஆக இருந்தால் மற்ற வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சலுகைகளை பெறுவதற்கு, ஒரு நாளுக்கு முன்பாகவே நீங்கள் பெறலாம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால். டிஸ்கவுண்ட் பெற்றுள்ள பல மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவுடன் வருகின்றன.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையின் போது, மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவின் (Motorola Edge 60 Pro) 8 ஜிபி + 256 ஜிபி ரேம் ஆப்ஷன். அதன் அசல் விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்கப்படும்
இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,999 க்கு பதிலாக ரூ. 28,999 க்கும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கும் விற்கப்படும். இதேபோல், மோட்டோரோலா ரேஸர் 60 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.49,999 ஆகும்.
இதேபோல மோடோடோ ஜி96 5ஜி (Moto G96 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி86 பவர் (Moto G86 Power) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G ) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்
மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்
மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது FHD+, 120ஹெர்ட்ஸ், LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 20W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ஓஎஸ் புதுப்பிப்பு, இரண்டு SMR அப்டேட்களை (அதாவது ஆண்ட்ராய்டு 15 வரையிலாக அப்டேட்டை) பெறும். கேமராக்களை பொறுத்தவரை மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 8MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷபின் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் கொண்டு இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது.


Click it and Unblock the Notifications








