மோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மிரட்டலான 5ஜி மாட்ஸ் வசதியுடன் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புது ரக Z சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

By Sharath
|
மோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மிரட்டலான 5ஜி மாட்ஸ் வசதியுடன்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புது ரக Z சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஃபிளாக்ஷிப் மோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் ,மிரட்டலான மோட்டோ 5ஜி மாட்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோடோரோலா மோட்டோ Z3 ப்ளே மாடலை தொடர்ந்து இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ Z3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்னை, 5ஜி செயல்திறன் கொண்ட மோட்டோ 5ஜி மாட்ஸ் உடன் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அமோலெட் 1080 x 2160 திரை

அமோலெட் 1080 x 2160 திரை

மோடோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் சூப்பர் அமோலெட் 1080 x 2160 ரெசொலூஷன் பிக்சல் 18:9 விகித திரையுடன் கூடிய 402 பிக்சல் அடர்த்தி கொண்ட 6.01 இன்ச் திரையுடன் வருகிறது. இது 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் புராசஸரில் செயல்படுகிறது. மேலும் இதில் 4 GB ரேம் 64ஜிபி உள் சேமிப்புடன் 2டிபி விரிவாக்க ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மோடோரோலா மோட்டோ Z3 ஆன்ட்ராய்டு 8.0 செயலி இல் இயங்குகிறது.

மோட்டோரோலா மோட்டோ Z3 டூயல் கேமரா

மோட்டோரோலா மோட்டோ Z3 டூயல் கேமரா

மோட்டோரோலா மோட்டோ Z3 டூயல் கேமரா சேவையுடன் வருகிறது. 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஒன்றுடன் 12 மெகா பிக்சல் மோனோக்றோம் பின் கேமராவுடன் கூடிய இரண்டு எல்இடி பிளாஷுடன் வருகிறது. முன் செல்ஃபீ கேமரா சேவைக்கு 8 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 84 டிகிரி பியில்ட் வியூவுடன் வருகிறது. இதில் பேஸ் அன்லாக் வசதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

3000 எம்எஎச் பேட்டரி

3000 எம்எஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ Z3 நீத்தது உழைக்கும் 3000 எம்எஎச் பேட்டரியுடன் 15 வாட்ஸ் டர்போ சார்ஜ்ர்ருடன் உங்களுக்கு சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சேவையை வழங்குகிறது. 4ஜி வோல்ட், வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ்,என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி சேவைகளுடன் வருகிறது. இறுதியாக 156.5x76.5x6.75 மிமீ மற்றும் 156 கிராம் எடையுடன் வருகிறது மோட்டோ Z3.

ஆகஸ்ட் 16 விற்பனை

ஆகஸ்ட் 16 விற்பனை

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ Z3 போர்ஸ் மாடல் போன் ஐ வெளியிடாது எனவும், இந்த ஆண்டிற்கான கடைசி Z சீரிஸ் மாடல் இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ Z3 ஆகா இருக்குமென்று மோட்டோரோலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியாக கூறியுள்ளது. இந்த புதிய பிளாக்ஷிப் மோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் இந்த கருப்பு நிறத்தில் ஆகஸ்ட் 16ம் தேதி விற்பனைக்கு வருமென்று கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Z3 With Snapdragon 835 SoC 6-Inch 18 9 Display 5G Moto Mod Launched Price Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X