மிரட்டலான மெட்டல் பாடி; ரெட்மீ நோட் 5 ப்ரோவிற்கே செக் வைக்கும் மோட்டோ Z3 பிளே!

ஒரே அளவிலான ரேம் கொண்டு மொத்தம் இரண்டு சேமிப்பு வகைகளில் வெளியவரவுள்ள மோட்டோ இசெட்3 பிளே ஒரு 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும். அது ஒரு 18: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

|

மோட்டோரோலாவின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ இசெட்3 ப்ளே பற்றிய சில விவரங்கள் வெளியாகியுள்ளது. எக்ஸ்டி1929 என்கிற மாடல் நம்பரின் கீழ், எப்சிசி (FCC) தரச்சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது முன்னர் வெளியான மோட்டோ இசெட்2 பிளே ஸ்மார்ட்போனை விட சிறப்பான மேம்பாடுகளை பெற்றுள்ளது போல் தெரிகிறது.

வெளியான பட்டியலின் படி, இந்த ஸ்மார்ட்போன் ஆனது சியோமி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே) ஸ்னாப்டிராகன் 36 எஸ்ஓசி கொண்டு இயங்கும்.

6.1 இன்ச் டிஸ்பிளே.!

6.1 இன்ச் டிஸ்பிளே.!

ஒரே அளவிலான ரேம் கொண்டு மொத்தம் இரண்டு சேமிப்பு வகைகளில் வெளியவரவுள்ள மோட்டோ இசெட்3 பிளே ஒரு 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும். அது ஒரு 18: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இங்கு மோட்டோ மோட்ஸ் ஆதரவு பற்றிய சில கேள்விகளை எழுப்பிய ஆகவேண்டும்.

ஸ்க்ரீன் அளவு பெரிதாகும்.!

ஸ்க்ரீன் அளவு பெரிதாகும்.!

முன்னர் வெளியான முதல் இரண்டு மோட்டோ இசெட் ஸ்மார்ட்போன்களிலும் 'மோட்ஸ்' ஆதரவை மோட்டோரோலா உறுதி செய்து இருந்தது. ஆனால் இந்த 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீன் அளவு பெரிதாகும் பட்சத்தில் மோட்டோ மோட்ஸ் ஆதரவு என்பது சந்தேகத்திற்கு உரியதாகே இருக்கும்.

4ஜிபி ரேம் + 32 ஜிபி அல்லது 64 ஜிபி.!

4ஜிபி ரேம் + 32 ஜிபி அல்லது 64 ஜிபி.!

ஸ்க்ரீன் அளவை தவிர்த்து, இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பார்த்தால் (பட்டியலின்படி) 4ஜிபி ரேம் உடனான 32 ஜிபி அல்லது 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும். உடன் ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் வழியிலான மெமரி விரிவாக்க ஆதரவும் கிடைக்கும்.

12எம்பி  + 8எம்பி.!

12எம்பி + 8எம்பி.!

கேமராக்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது அதன் பின்புறத்தில் ஒரு 12எம்பி + 8எம்பி (டெலிஃபோட்டோ லென்ஸ்) என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்திய விற்பனையை பொறுத்தவரை, மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது டூயல் சிம் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயத்தை பொருத்தமாரி, ரூ.25,000/-க்கு மேல் என்கிற புள்ளியில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான ஒரு லீக்ஸ் ரெண்டரின் படி, இந்த ஸ்மார்ட்போன் பெஸல்லெஸ் வடிவமைப்பு, யூனிமெட்டல் பாடி, ஆகியவைகளை கொண்டிருக்கும். இந்த மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 வரிசையின்கீழ் வெளியாகும் மற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto Z3 Play With Snapdragon 636 SoC and 6.1-inch Screen Gets Certified. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X