Home
Mobile

ஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி மோட்டோ இசெட்3 பிளே என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.!

குறிப்பாக இந்த இசெட்3 பிளே ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
மேலும் டூயல் ரியர் கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 1080x2160 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.!

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மோட்டோ இசெட்3 பிளே ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும். அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Z3 Play Launch Expected on June 6 as Company Sends Invites for Brazil Event ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X