அட்டகாசமான மோட்டோ இசெட்2, 2017 ஜூலை 25 வெளியீடு (அம்சங்கள்).!
மோட்டோ இசெட்2 பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு உள்ளது. அதன்பின்(1440-2560)வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.!
மோட்டோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஜூலை 25ஆம் தேதி மோட்டோ இசெட்2 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். புதிய மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இரட்டை கேமரா அமைப்பு, மேலும் 4ஜிபி ரேம் போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் பல செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.1.1:
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி செயலி கொண்டுள்ளது, மேலும் இதன் இயக்கவேகம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்போது வந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இயங்குகிறது.

கார்னிங் கொரில்லா கண்ணாடி :
மோட்டோ இசெட்2 பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு உள்ளது. அதன்பின்(1440-2560)வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

4ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது, அதன்பின் கைரேகை ஸ்கேனர் இவற்றில் உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டது, சிறப்பான செயல்திறன்களை கொண்டுள்ளது, மேலும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

செல்பீ கேமரா:
மோட்டோ இசெட்2 ரியர் கேமரா 13மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பின்புறம் எல்இடி ப்ளாஷ் ஆதரவு உள்ளது.

3630எம்ஏச்:
இந்த ஸ்மார்ட்போன் 3630எம்ஏச் பாஸ்ட் சார்ஸ் ஆதரவு கொன்ட பேட்டரியுடன் வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications