மோட்டோ இசெட்2 பிளே பற்றிய புதிய லீக் அம்சங்கள்.!

Written By:

லெனோவா நிறுவனத்தின் பிராண்ட் ஆன மோட்டோ கருவிகளின் அடுத்த வெளியீடாக கருதப்படும் மோட்டோ இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. இந்த வாரம் முன்னதாக, மோட்டோ இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் சார்ந்த குறிப்புகளை வெளிப்படுத்தும் டிஇஎன்ஏஏ (TENAA) சான்றிதழ் வழியாக கசிந்தன.

இப்போது, இந்த ஸ்மார்ட்போன் ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் (GFXBench) செயல்திறன் மட்டக்குறி தளத்தில் காணப்பட்டுள்ளது அதேசமயம் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் முன்னர் வெளியான குறிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உறுதி

உறுதி

ஒரு ட்வீட் மூலம் தாய் நிறுவனமான லெனோவா, மோட்டோ இசெட்2 ப்ளே அக்கருவி ஒரு 3000எம்ஏஎச் நீக்கக்முடியாத பேட்டரி கொண்டு வரும் அதாவது அதன் முன்னோடியான மோட்டோ இசெட் ப்ளே கருவியின் 3510எம்ஏஎச் பேட்டரியை விட குறைவானதாக கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்தது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

தற்போது வெளியாகியுள்ள தகவலின் கீழ் மோட்டோ எக்ஸ் இசெட்2 பிளே கருவியானது 5.5 இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்ஸல்) டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டிருக்க்கலாம் என்று தெரிய வருகிறது.

குவால்காம்

குவால்காம்

மேலும் இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் மற்றும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியை விட சற்று சிறப்பாக செய்லபடும் என்றும் நம்பப்படுகிறது. கிராபிக்ஸ் பாகத்தில், மோட்டோ இசெட்2 ப்ளே, ஓப்பன்ஜிஎல் இஎஸ்3.2 வன்பொருள் உடனான அட்ரீனோ 506 கொண்டு செயல்படும்.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் முன்னோடி மோட்டோ இசெட் ப்ளே (16 மெகாபிக்சல் பின்புற கேமரா) கருவியை விட குறைவான அளவு கேமராவே கொண்டுள்ளது. அதாவது 4கே தீர்மானம் வரை வீடியோ பதிவு கொண்ட 12 மெகாபிக்சல் கேமரா பொதி உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தம்மட்டில் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

ஜூன் 8

ஜூன் 8

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக சாத்தியமுள்ள விரிவாக்கத்துடன் 64 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இயக்கருவி சார்ந்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி சார்ந்த எந்த தகவலும் இல்லை. இருப்பினும் ஒரு சமீபத்திய செய்தி அறிக்கை இந்த சாதனம் ஜூன் 8 அன்று வெளியிடப்படலாம் என்று கூறுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Moto Z2 Play Specifications Tipped by GFXBench Benchmark Listing. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot