ப்ரீ-ஆர்டர் : வெறும் ரூ.2000/- செலுத்தினால் மோட்டோ இசெட்2 பிளே.!

இந்தியாவில் மோட்டோ இசெட் 2 ப்ளே அறிமுகப்படுத்தும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் தொலைபேசி முன்பதிவு செய்வதற்கான விவரங்களையும், வாடிக்கையாளர்களால் பெறக்கூடிய சலுகைகளையும் நிறுவனம் பகிர்

|

கடந்த வாரம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இசெட்2 பிளே கருவி இந்தியாவின் முன்பதிவிற்காக வரும் ஜூன் 8, வியாழக்கிழமை முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மோட்டோ இசெட் 2 ப்ளே அறிமுகப்படுத்தும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் தொலைபேசி முன்பதிவு செய்வதற்கான விவரங்களையும், வாடிக்கையாளர்களால் பெறக்கூடிய சலுகைகளையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

ப்ரீ-ஆர்டர் : வெறும் ரூ.2000/- செலுத்தினால் மோட்டோ இசெட்2 பிளே.!

லெனோவா நிறுவனம் ஒரு ட்வீட் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்கீழ் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.2,000/- மட்டும் செலுத்தி பின்னர் மீதமுள்ள தொகையை செலுத்த 10 மாதங்கள் என்ற வண்ணம் பூஜ்ய சதவீதம் வட்டியின் கீழ் இக்கருவியை பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் லெனோவா மோட்டோ ஆர்மர் பேக்கையும் (இது ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பான ஆபரணங்களை உள்ளடக்கியது) வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கண்ணாடி 3

கார்னிங் கொரில்லா கண்ணாடி 3

மிகவும் எதிர்பார்க்பட்ட லெனோவா நிறுவனத்தின் சொந்த மோட்டோரோலா கருவியான மோட்டோ இசெட்2 பிளே (அதன் இரண்டாம் தலைமுறை கருவி) ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1080 x 1920 பிக்சல்கள்) கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு கொண்ட சூப்பர்அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 2.2 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 626 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

மோட்டோரோலா மோட்டோ இசெட்2 பிளே இரண்டு மாடல்களில் வருகிறது, ஒரு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்டு வருகிறது. 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் விரிவாக்க ஆதரவு வழங்கும்.

கேமரா

கேமரா

கேமரா துறையயை பொறுத்தம்மட்டில் மோட்டோ இசெட்2 ப்ளே லேசர் மற்றும் இரட்டை ஆட்டோபோகஸ் லென்ஸ், எப் / 1.7 துளை மற்றும் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம், ஒரு 5 மெகாபிக்சல் அகல கோணம் செல்பீ கேமராவும் மற்றும் பின்புற கேமரா போன்றே இரட்டை எல்இடி கொண்டுள்ளது.

இரட்டை-எல்இடி ப்ளாஷ்

இரட்டை-எல்இடி ப்ளாஷ்

மோட்டோரோலா நிறுவனம் இதன் பிளாஷை ஒரு வண்ண தொடர்புடைய வெப்பநிலையை (சிசிடி) இரட்டை-எல்இடி ப்ளாஷ் என்று அழைக்கிறது, இது இயற்கை காட்சிகளை அவ்வாறே எடுக்கும் திறன் கொண்டது என்றும் கூறுகிறது.

ஹோம் பொத்தானில்

ஹோம் பொத்தானில்

முந்தைய மோட்டோ ஸ்மார்ட்போன்கள் போலவே, இந்த புதிய மோட்டோ இசெட்2 கருவியும் கைரேகை சென்சாரை ஹோம் பொத்தானில் கொண்டுள்ளது மற்றும் நீர் விரட்டும் நானோ-பூச்சு கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

இது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது (பெட்டிக்கு வெளியே) மற்றும் யூஎஸ்பி டைப்-சி மற்றும் டர்போ சார்ஜ் திறன் கொண்ட ஒரு 3000எம்ஏச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது இது வெறும் 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது.

நான்கு புதிய மோட்டோ மோடஸ்

நான்கு புதிய மோட்டோ மோடஸ்

மோட்டோ இசெட்2 ப்ளே கருவியில் கூடுதலாக லெனோவாவின் நான்கு புதிய மோட்டோ மோடஸ் (Mods) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 79 டாலர்களுக்கு புதிய ஜேபிஎல் சவுண்ட்போஸ்ட் 2 மற்றும் டர்போ பேவர் பேக்கும், வயர்லெஸ் சார்ஜிங் உடனான புதிய மோட்டோ ஷெல்ஸ் 39 டாலருக்கும் இறுதியாக, ஒரு புதிய மோட்டோ கேம் பேட் 79 டாலருக்கும் என மொத்தம் நான்கு மோட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த லெனோவா மோட்டோ இசெட்2 ப்ளே ஆனது கிட்டத்தட்ட ரூ. 32,200/- என்ற விலை நிர்ணயம் கொண்டு அறிமுகப்படுத்தபட்டது. அதன் முன்னோடி போலவே, மோட்டோ ஜஸ்ட்2 கருவியின் பின்பகுதியில் மோட்டோ மோட்ஸ் இணைக்கும் பின் ஆதரவுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Moto Z2 Play India Pre-Orders Open Thursday, Include Moto Armor Pack and Moto Mods Offers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X