5.5இன்ச் டிஸ்பிளே, 3000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ இசெட்2 ப்ளே.!
புத்தம் புதிய மோட்டோ இசெட்2 ப்ளே பற்றிய சிறப்புகள்.!
மோட்டோரோலா இந்த ஆண்டு பல மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. மேலும் மோட்டோ இசெட்2 ப்ளே 2017 ஆம் ஆண்டின் மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாகும். சமீபத்தில் ட்விட்டரில் இந்த தொலைபேசியின் பேட்டரி மற்றும் செயல்திறன்கள் பற்றி சில அறிவிப்புகள் வெளிவந்தன.
மோட்டோரோலா மொபைல்போன் பொருத்தமாட்டில் பல சிறப்புகள் உள்ளன, மேலும் தற்போது வெளிவரும் மோட்டோ இசெட்2 ப்ளே பொருத்தவரை பல்வேறு புதிய மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

மோட்டோ இசெட்2 ப்ளே :
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்படுகிறது என சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மோட்டோ இசெட்2 ப்ளே சமீபத்தில் டிஇஎன்ஏஏ சான்றிதழ் பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சான்றிதல் கேமரா மற்றும் அனைத்துப்பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது.

டிஸ்பிளே:
இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே என அறிவிக்கப்பட்டுள்ளது. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

கேமரா:
மோட்டோ இசெட்2 ப்ளே பொருத்தவரை ரியர் கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை எனவும், மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

மெமரி;
இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி. மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு எனக்கூறப்பட்டுள்ளது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இசெட்2 ப்ளே சாப்ட்வேர்:
மோட்டோ இசெட்2 ப்ளே பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. அக்டா கோர், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 626எஸ்ஒசி பொருத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.1 ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை , ப்ளுடூத் , ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








