6ஜிபி ரேம் உடன் வெளிவரும் மோட்டோ இசெட்2 போர்ஸ்.!
மோட்டோ இசெட்2 போர்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அதன்படி இப்போது 6ஜிபி ரேம் உடன் மோட்டோ இசெட்2 போர்ஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்த மோட்டோரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது, மேலும் சீன வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
மோட்டோ இசெட்2 போர்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2730எம்ஏஎச்:
மோட்டோ இசெட்2 போர்ஸ் பொறுத்தவரை 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications