ஓரமா ஒதுங்கி நில்லு.. 5.9 மிமீ பாடியில் 4800mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் களமிறங்கி இருக்கிறது. ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் அல்ட்ரா ஸ்லிம் பாடி மாடல்களை ஓரங்கட்டும்படியான பட்ஜெட் விலையில் கொடுத்து இருக்கிறது. 5 எம்எம் தடிமனில் 4800mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
மோட்டோ எக்ஸ்70 ஏர் அம்சங்கள் (Moto X70 Air Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
இந்த டூயல் ரியர் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனுக்கு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.
இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனில் 4800mAh பேட்டரி மற்றும் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.99 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல வெறும் 159 கிராம் எடை மட்டுமே கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் டைப்-சி ஆடியோ உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் மட்டுமல்லாமல், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மற்றும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது.
மேலும், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனில் கேட்ஜெட் கிரே (Gadget Gray), லில்லி பேட் (Lily Pad) மற்றும் ப்ரோன்ஸ் (Bronze) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,293ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,023ஆகவும் இருக்கிறது. இது சீன யுவானின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலைகளாகும். அக்டோபர் 31ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. இப்போது சீன மார்கெட்டில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனானது, குளோபல் மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடலாக வெளியாக இருக்கிறது. இந்தியாவில் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் பட்ஜெட் விலையில் வெளியாக வாய்ப்புள்ளது. ரூ.29,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications