Home
Mobile

Apple தலையில் இடியை இறக்கிய போன்.. pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 4800mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏர் (iPhone Air) மாடலை தூக்கி சாப்பிடும்படி மோட்டோரேலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) களமிறங்கி இருக்கிறது. சத்தமே இல்லாமல், பிஓஎல்டி டிஸ்பிளே, 50 எம்பி கேமரா 12 ஜிபி ரேம், 4800mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5.99 எம்எம் தடிமன் மட்டுமே இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐபோன் ஏர் ஸ்மார்ட்போன் 5.64 எம்எம் தடிமனில் வெளியாகியது. இதற்கு போட்டியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மாடலானது 5.8 எம்எம் தடிமனில் கிடைத்தது. ஆனால், இந்த மாடல்களின் விலை ரூ.1 லட்சத்துக்கும் மேலாக இருக்கிறது. அதேபோல பேட்டரியில் அதிக பேக்கப் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் 4800mAh பேட்டரி கொடுக்கிறது.

Apple தலையில் இடியை இறக்கிய போன்.. pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. மாடல்?

அதே நேரத்தில் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்ஜெட்டில் இருந்து பாதிக்குப்பாதி விலையைவிட மலிவாக கிடைக்க இருக்கிறது. இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனானது, அக்டோபர் 31ஆம் தேதி சீன மார்கெட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. ஆனால், இப்போதே முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ எக்ஸ்70 ஏர் அம்சங்கள் (Moto X70 Air Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிளாட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4,800mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

மேலும், 20W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.99 எம்எம் தடிமன் மற்றும் 159 கிராம் எடை வருகிறது. 3டி வேப்பர் கூலிங் சேம்பருடன் (3D Vapor Cooling Chamber) ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. மோட்டோ ஏஐ (Moto AI) மற்றும் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது.

இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனில் கேஜெட் கிரே (Gadget Grey), லில்லி பேட் (Lily Pad) மற்றும் ப்ரோன்ஸ் கிரீன் (Bronze Green) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ரூ.30,000 அல்லது ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. சீனாவில் மோட்டோ எக்ஸ்70 ஏர் மாடலாக வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) மாடலாக வருகிறது.

நவம்பர் 5ஆம் தேதி குளோபல் வெளியீடு நடக்க இருக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடலாக இது வெளியாகும். ஏற்கனவே, மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999 பட்ஜெட்டில் மட்டுமே இருக்கிறது. ஆகவே, மோட்டோரோலா எட்ஜ் 70 மாடல் ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto X70 Air With 12GB RAM 50MP Camera 4800mAh Battery Unveiled in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X