Home
Mobile

அடுத்த மாதம் உறுதி.. வருகிறது மெல்லிய மோட்டோ ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மெல்லிய வடிவமைப்பைக் கொண்ட மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் அக்டோபர் மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்த போன் மற்ற நாடுகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனின் சில படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதில் இந்த போன் மிகவும் மெலிதாக இருப்பது தெரிகிறது. பின்பு இந்த போன் கிரீன் நிறத்திலும் அறிமுகமாகும். பின்பு TENAA சான்றிதழ் தளத்தில் XT2533-4 என்ற மாடல் நம்பர் கொண்ட மோட்டோ போன் விவரக்குறிப்புகள் உடன் காணப்பட்டது. இது மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த சான்றிதழ் தளத்தில் காணப்பட்ட மோட்டோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

அடுத்த மாதம் உறுதி.. வருகிறது மெல்லிய மோட்டோ ஸ்மார்ட்போன்..

புதிய மோட்டோ போன் 6.72-இன்ச் 1.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7000mAh பேட்டரி உடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் புதிய மோட்டோ போன் அறிமுகமாகும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு இந்த போனின் பேட்டரி மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

210 கிராம் எடையும் 8.7 மிமீ தடிமன் கொண்டுள்ளது புதிய புதிய மோட்டோ போன். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Moto X70 Air to be launched next month: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X