Home
Mobile

உலகமே இந்த Moto 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ (Moto X70 Air Pro) டீசரை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் 2026 தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியானது.

அதேபோல் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உலகமே இந்த Moto 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ அம்சங்கள் (Moto X70 Air Pro specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் ஒஎல்இடி (flat OLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான யுஎக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ போனில் உள்ளது.

6000mAh அல்லது 7000mAh பேட்டரி உடன் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto X70 Air Pro teaser released: May launch soon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X