அடுத்த Moto போன் ரெடி.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ (Moto X70 Air Pro) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் சீனாவின் 3சி சான்றிதழ் தளத்தில் XT2601-3 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ போன் உலக சந்தை மற்றும் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ அம்சங்கள் (Moto X70 Air Pro specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் ஒஎல்இடி (flat OLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான யுஎக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ போனில் உள்ளது.
7000mAh பேட்டரி உடன் மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் வெளிவரும். குறிப்பாக மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








