Home
Mobile

5.9 மிமீ, 159 கிராம்.. இப்படி ஒரு Motorola போனுக்கு தானே தவம் கிடந்தோம்.. எந்த மாடல்? என்ன விலை?

வெறும் 5.9 மிமீ என்கிற அளவிலான அல்ட்ரா-தின் டிசைன், கூடவே 159 கிராம் எடையுள்ள லைட் வெயிட் டிசைன் என்கிற காம்பினேஷனில்.. இப்படி ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு தானே இவ்வளவு நாட்கள் தவம் கிடந்தோம் என்று கூறும்படியாக.. ஒரு புதிய மாடல் சில தினங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அது மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி அன்று சீனாவிலும், அடுத்த நவம்பர் 2025 இல் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஆக இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.

இப்படி ஒரு Motorola போனுக்கு தானே தவம் கிடந்தோம்.. எந்த மாடல்?

சீன அறிமுகத்திற்கு முன்னதாக, மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதன் மூலம் அறிமுகத்திற்கு முன்னதாகவே மோட்டோ எக்ஸ்70 ஏர் (மோட்டோரோலா எட்ஜ் 70) ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

மோட்டோ எக்ஸ்70 ஏர் (மோட்டோரோலா எட்ஜ் 70) ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷனின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது .

இதே ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வரும். இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.36,000 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலையை நாம் இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம். இது கேஜெட் கிரே, லில்லி பேட் மற்றும் பிரான்ஸ் கிரீன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே (1220 x 2712 பிக்சல்ஸ்) ரெசல்யூசன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

பாண்டோன்-ஆல் சான்றளிக்கப்பட்ட இந்த பேனல் எஸ்ஜிஸ் கண் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் தடையற்ற அன்லாக்கிங்கிற்கான இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் LPDDR5x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தை திறமையாகக் கையாள இது ஒரு 3டி வேப்பர் சேம்பரையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை சின்ஹா ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் சாம்சங் S5KGNJ ப்ரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் செல்பீக்களுக்கான 50-மெகாபிக்சல் முன்பக்க கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனில் 68W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4800mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற சிறப்பம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுலயு

மேலும் மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது இது ஒரு அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன் என்பதால், இது 5.99 மிமீ தடிமன் மற்றும் சுமார் 159 கிராம் எடையை மட்டுமே கொண்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto X70 Air Price Confirmed Will debut in India as Motorola Edge 70 next month See Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X