Home
Mobile

இந்தியாவுக்கு வரும் மெல்லிய Moto ஸ்மார்ட்போன்.. IP69 ரேட்டிங்.. pOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) எனும் பெயரில் இந்தியாவிலும், உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வரும் நவம்பர் 5 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்போது மோட்டோ எக்ஸ்70 ஏர் போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு வரும் மெல்லிய Moto ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

மோட்டோ எக்ஸ்70 ஏர் அம்சங்கள் (Moto X70 Air Specifications): 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள்,120Hz ரெஃப்ரெஷ் ரேட் ,4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த ரியர் கேமரா ஆனது 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது. இதுதவிர் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 5.99 எம்எம் தடிமன் மற்றும் 159 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். இந்த மெலிதான மோட்டோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன். மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) ராணுவ தரத்திலான குவாலிட்டியும் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோ எக்ஸ்70 ஏர் போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.

இந்தியாவுக்கு வரும் மெல்லிய Moto ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

4800mAh பேட்டரி மோட்டோ எக்ஸ்70 ஏர் போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த புதிய மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto X70 Air India launch and specifications, price information leaked: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X