Home
Mobile

ஒன்பிளஸ் ஓரம்போ.. 125W சார்ஜிங்.. 64MPபி கேமரா, டால்பி அட்மாஸ்.. புதிய Moto போன் அறிமுகம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா (moto X50 Ultra) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்புடன் இந்த மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா அம்சங்கள் (moto X50 Ultra specifications):6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 144Hz refresh rate), 2500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

ஒன்பிளஸ் ஓரம்போ.. புதிய Moto போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்ம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் உடன் மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. பின்பு இதில் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கார்டு வருகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா போன் விற்பனைக்கு வரும். பின்பு இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன் (Water and dust resistant) வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் ஓரம்போ.. புதிய Moto போன் அறிமுகம்.. எந்த மாடல்?

OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சாம்சங் ஜேஎன்1 சென்சார்) + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி ஆட்டோ ஃபோகஸ் (auto focus) கேமரா இதில் உள்ளது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டால்பி அட்மாஸ் ட்யூனிங், டால்பி ஹெட் டிராக்கிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இதில் 3 மைக்ரோஃபோன்கள் (microphones) உள்ளன.

4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (125W TurboPower fast charging), 50W வயர்லெஸ் சார்ஜிங் (50W wireless charging), 5W ரிவர்ஸ் சார்ஜிங் (5W reverse charging) ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ்
செய்துவிட முடியும்.

ஒன்பிளஸ் ஓரம்போ.. புதிய Moto போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 7 802ஏஎக்ஸ் (Wi-Fi 7 802.11ax), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் ஆகும். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா போன் தற்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த போனின் ஆரம்ப விலை ரூ.46,240-ஆக உள்ளது. வரும் மே 24-ம் தேதி இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியாக இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
moto X50 Ultra With 16GB RAM, 64MP Camera Sale From May 24 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X