மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. 3D டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. 100X கேமரா.. 1TB மெமரி.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
அல்ட்ரா பிரீமியம் கேமரா சென்சார்களுடன் வெளியான மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா (Moto X50 Ultra) போனின் சாஃப்ட் பீச் லிமிடெட் எடிஷன் (Soft Peach Limited Edition) வெளியாகி மேலும் அதிரவிட்டுள்ளது.100x ஜூமிங் கேமரா கொண்ட இந்த போனின் விவரம் இதோ.
மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா அம்சங்கள் (Moto X50 Ultra Specifications): இந்த மோட்டோவில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். எச்டிஆர்10 பிளஸ் (HDR 10+) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபமென்ஸ் கொடுக்க கூடியது.
மிட்-பிரீமியம் போன்களில் வரும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா சாஃப்ட் பீச் லிமிடெட் எடிஷனில் 16 ஜிபி ரேம் + 1 மெமரி வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64 எம்பி போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா வருகிறது.
இந்த மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் வருகிறது. மேலும், டெலிபோட்டோ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் வருகிறது. 100x டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, கேமராவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் மாடலாக இந்த மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா இருக்கிறது. 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆடியோவிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
டால்பி ஹெட் டிராக்கிங் (Dolby Head Tracking) சப்போர்ட் கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் 3 மைக்ரோபோன்கள் (Microphones) வருகின்றன. இந்த அல்ட்ராவில் IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. பேட்டரி சிஸ்டம் அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி உள்ளது.
இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging), 5W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் வருகிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) பாடி மற்றும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த மோட்டோ எக்ஸ்50 அல்டாவானது, 8.5 மிமீ தடிமன் மற்றும் 197 எடை மட்டுமே கொண்டிருக்கிறது.
இந்த மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா சாஃப்ட் பீச் லிமிடெட் எடிஷனின் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.53,950ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. மற்ற நாடுகளில் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. பீரிமியம் கேமரா பிரியர்களைடையே இந்த மாடல் வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications