ஒருவழியாக Moto X40 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கியது.! விற்பனை தேதி இதுதான்.!

|

மோட்டோரோலா நிறுவனம் வரும் டிசம்பர் 15-ம் தேதி புதிய மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது சீனாவில் இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது. குறிப்பாக டிசம்பர் 15-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ்40

மோட்டோ எக்ஸ்40

அதேபோல் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!

ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட்

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Mars இல் வேலையை தொடங்கிய நாசா! பள்ளம் தோண்டி பூஜை ஆரம்பம்.. மனிதர்கள் வாழ முடியுமா?Mars இல் வேலையை தொடங்கிய நாசா! பள்ளம் தோண்டி பூஜை ஆரம்பம்.. மனிதர்கள் வாழ முடியுமா?

512ஜிபி ஸ்டோரேஜ்

8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்.! Apple வாட்சிற்கும் இதற்கும் வித்தியாசமே இல்லை.! கம்மி விலை Smartwatch.!ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்.! Apple வாட்சிற்கும் இதற்கும் வித்தியாசமே இல்லை.! கம்மி விலை Smartwatch.!

50எம்பி மெயின் கேமரா

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

முடிஞ்சா இந்த ரூ.3000 போன் கிட்ட மோதி பாருங்க.. சீன முதலாளிகள் கண்களில் விரலை விட்டு ஆட்டும் இந்திய பிராண்ட்!முடிஞ்சா இந்த ரூ.3000 போன் கிட்ட மோதி பாருங்க.. சீன முதலாளிகள் கண்களில் விரலை விட்டு ஆட்டும் இந்திய பிராண்ட்!

4450 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

நச்சுனு வெளியான Tecno Phantom X2.! OnePlus, Xiaomi-க்கு பதிலடி கொடுக்கிறதா Tecno? அசத்தலா ஒரு போன்.!நச்சுனு வெளியான Tecno Phantom X2.! OnePlus, Xiaomi-க்கு பதிலடி கொடுக்கிறதா Tecno? அசத்தலா ஒரு போன்.!

 கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moto X40 is available for pre-order ahead of its official launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X