டூயல் கேம் அம்சம் கொண்ட மோட்டோ எக்ஸ் 4 (இந்திய வெளியீடு, விலை & அம்சங்கள்).!
வெளியான ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஹேஷ்டாக் #xperience ஆனது நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன் மோட்டோ எக்ஸ்4-ஐ வெளிப்படையாக சுட்டிக்காட்டுகின்றன.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவின் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ எக்ஸ் 4 சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் பதிவிட்ட ட்விட்டர் ஒன்றின்கீழ், அதன் புதிய விளம்பர பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளது, இது வரவிருக்கும் அதன் ஸ்மார்ட்போனின் துவக்கத்தை குறிப்பதாக உள்ளது.

வெளியான ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஹேஷ்டாக் #xperience ஆனது நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன் மோட்டோ எக்ஸ்4-ஐ வெளிப்படையாக சுட்டிக்காட்டுகின்றன. சுவாரசியமாக இந்த ட்வீட் உடன் புதிய ஸ்மார்ட்போனின் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது
வெளியான படத்தில் ஒரு இரட்டை-கேமரா அமைப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆக மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை தான் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

முழு எச்டியூ எல்டிபிஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
இந்த சாதனத்தின் சில முக்கிய அம்சங்களை மறுபரிசீலனை செய்வதிலிருந்து, மோட்டோ எக்ஸ் 4 ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.2 அங்குல முழு எச்டியூ எல்டிபிஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் ரேம்
அட்ரெனோ 508ஜிபியூ உடன் இணைந்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு ஸ்டோரேஜ் மற்றும் ரேம் வகைகளில் - 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் + 64ஐபி உள் சேமிப்பு - இக்கருவி வெளியாகிறது.

விலை நிர்ணய புள்ளி
இந்தியாவில் ரூ.24,990 /- என்ற விலை நிர்ணய புள்ளியை கொண்டு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்கிறது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் இரண்டு சேமிப்பு மாதிரிகளுமே, மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக 2டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவை வழங்குகிறது.

இரட்டை கேமரா அமைப்பு,
இதன் பிராதன சிறப்பம்சமாக இரட்டை கேமரா அமைப்பு, எப்/2.0 துளை கொண்ட 12எம்பி சென்சார் மற்றும் 120 டிகிரி வியூ வழங்கும் ஒரு 8எம்பி பரந்த கோண லென்ஸ் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கம், ஒரு எப்/ 2.0 துளை கொண்ட ஒரு 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு
ப்ளூடூத் 5.0, அதன் வழியாக பல்வேறு ப்ளூடூத் ஸ்பீக்கர்களையும் ஸ்ட்ரீம்களையும் புதிய அனுபவத்தில் வழங்கும் சரவுண்ட் சவுண்ட் அம்சம் கொண்டுள்ள இக்கருவி க்ளோநாஸ், என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி, மற்றும் 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் ஆகிய இதர இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது.

ஐபி68 நீர் எதிர்ப்பு சான்றிதழ்
திறமையான கண்ணாடி மற்றும் உலோக பாடியை கொண்டுள்ளது. ஆனால் அது தோற்றத்துக்கு மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த தொலைபேசி ஐபி68 நீர் எதிர்ப்பு சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் 3000எம்ஏஎச் டர்போ பவர் பேட்டரியானது அதன் 5.2 அங்குல 1080பி டிஸ்பிளேவை திறம்பட செயல்பட வைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications