வரிசைக்கட்டும் லீக்ஸ் அம்சங்கள் : மோட்டோ ஜி5எஸ் பிளஸ், எக்ஸ்4, இசெட்2 போர்ஸ்.!

Written By:

லெனோவா நிறுவனத்தின் பிராண்ட் ஆன மோட்டோ அதன் மோட்டோ ஜி5எஸ் பிளஸ், மோட்டோ எக்ஸ் 4 மற்றும் மோட்டோ இசெட்2 போர்ஸ் ஆகிய கருவிகளை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவலின்கீழ் இந்த கோடையில் இந்த தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று டிப்ஸ்டர் ஆண்ட்ரி யத்திம் தகவல் வெளியிட்டிருந்தார்.

லீக்ஸ் அம்சங்கள் : மோட்டோ ஜி5எஸ் பிளஸ், எக்ஸ்4, இசெட்2 போர்ஸ்.!

அதே டிப்ஸ்டர் இப்போது மோட்டோ எக்ஸ்4 வெளியீடு சார்ந்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இதில் மோட்டோ எக்ஸ் 4 எப்போது வெளியாகும் என்ற தகவல்களை விட என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்ற விவரங்கள் அதிகமாக உள்ளது. அதன்படி மோட்டோ எக்ஸ்4 சுற்றி ஒரு உலோக வடிவமைப்பு கொண்ட ஒரு கருவியாய் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் இது 5.2 அங்குல முழு எச்டி டிஸ்பிளே இடம்பெறுகிறது மற்றும் ஒரு ஸ்னாப்டிராகன் 660 செயலி உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயங்கலாம். மேலும் இந்த மோட்டோ எக்ஸ் 4 ஆனது 32ஜிபி மற்றும் 64ஜிபி என்ற சேமிப்பு விருப்பங்களில் வழங்கப்படலாம் மற்றும் ஜூன் 30 அன்று அறிமுகப்படுத்தப்படும்.

சமீபத்திய லீக் நம்பப்படுகிறது என்றால், மோட்டோ எக்ஸ்4 ஆனது எப்/ 1.7 துளை மற்றும் எப்/ 2.2 துளை லென்ஸ்கள் உடனான ஒரு இரட்டை 13 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பு கொண்டிருக்கலாம். இந்த முன்னணி கேமரா அமைப்பு இப்போது வரை தெளிவற்றதாகவே உள்ளது.

மோட்டோ எக்ஸ்4 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்கத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் கைரேகை சென்சார் ஒன்றும் அடங்கும். குறிப்பிடப்பட்ட இதர அம்சங்களை பொறுத்தமட்டில் என்எப்சி, தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68 மதிப்பீடு மற்றும் யூஎஸ்பி டைப்-சி வழியாக பாஸ்ட் சார்ஜ் 3.0 உடன் 3800எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகள் அடங்கும்.

விலை நிர்ணயங்களை பொறுத்தமட்டில் 32 ஜிபி மாறுபாடு ரூ.20,999/-க்கும் மற்றும் 64ஜிபி மாறுபாடு ரூ.23,999/-க்கும் என்ற புள்ளிக்கு அருகில் விற்பனைக்கு வரலாம். மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது ரூ.17,999/-க்கும் மற்றும் மோட்டோ இசெட்2 போர்ஸ் ரூ. 38.999/-க்கும் அறிமுகமாகலாம்.English summary
Moto X4 Specifications Leaked, Tipped to Launch on June 30. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot