மோட்டோ எக்ஸ்4 சிறப்பம்சங்கள் என்னென்ன?
மோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது
லெனோவோ நிறுவனம் கூடிய விரைவில் புதிய மோட்டோ எக்ஸ்4 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, இதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஒசி செயலி இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதுஇ அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
மோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications