Subscribe to Gizbot

மோட்டோ எக்ஸ்4: நம்பி வாங்க 10 காரணங்கள்.!

Written By:

நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோன்களுக்கு அடுத்தபடியாக, 2000-களில் நம்மையெல்லாம் நமக்கொன்று கிடைத்து விடாதா.? என்று அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு கிளாசிக் கருவிதான் - மோட்டோ ரேஸர்.!

2000-ஆம் ஆண்டுகளின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இந்த ப்ளிப்போன் ஆனது பெரிய அளவிலான விற்பனையை சந்தித்தது. அன்று தொடங்கி இன்று வரை மோட்டோரோலா சாதனங்களை மக்கள் இன்னும் ஏன் விரும்புகிறார்கள் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது - அவைகள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன, சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருளின் கலவையை கொண்டுள்ளன மற்றும் அற்புதமான செயல்திறனை வழங்குகின்றன.!

சரி இதையெல்லம் ஏன் இப்போது நினைவுபடுத்திக்கொள்கிறோம்.? மோட்டோ ரேஸர் கருவிக்கு இணையான "பெஸ்ட் செல்லர்" மொபைல் வருகிறதா.? என்று கேட்டால் - உங்கள் கணிப்பு மிகச்சரியே.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பில் கூர்மையான கவனம்

வடிவமைப்பில் கூர்மையான கவனம்

புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள மோட்டோ எக்ஸ்4 ஆனது நிறுவனத்தின் அடுத்த சிறந்த விற்பனையாகும் ஸ்மார்ட்போனாகும் அத்துனை அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. ஸ்டெர்லிங் ப்ளூ மற்றும் சூப்பர் பிளாக் நிற மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி அதன் வடிவமைப்பில் கூர்மையாக கவனம் செலுத்தியுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

கார்னிங் கொரில்லா கிளாஸ்

ஒரு அனைத்து கண்ணாடி உலோக உடலை கொண்டுள்ளதால் மோட்டோ எக்ஸ் 4 ஆனது மிகவும் அழகான, மேலும் வலுவான மற்றும் ஈர்க்கக்கூடிய தோற்றத்தை கொண்டுள்ளது. 1080 × 1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.2 இன்ச் முழுஎச்டி எல்டிபிஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும், அதன் நேர்த்தியான 3டி பின்புறமானது ஒரு முரட்டுத்தனமான வடிவமைப்பை கொண்டுள்ளது. முன்பக்க பாதுகாப்பை அதன் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடனான அனாடைஸ்டு அலுமினிய வடிவமைப்பு உறுதி செய்கிறது.

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு

இக்கருவி வலிமையானது மட்டுமல்ல தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழுக்கான ஐபி68 மதிப்பீடும் கொண்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம். ஆக தற்செயலான நீர் கசிவுகள்ப இதன் செயல்திறனை அழிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெளிப்புறம் போன்றே அதன் உள்ளடக்கங்களும் மிகவும் திறன்வாய்ந்ததாக இருக்கிறது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

இந்த மோட்டோரோலா சாதனமானது, 2.2ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப் 630 செயலி மற்றும் 650 மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 508 ஜிபியூ உடனான 4 ஜிபி ரேம் உடன் இணைக்கட்டுள்ளது. இந்த வலிமையான கூட்டணியானது உங்களின் மல்டி டாஸ்கிங்கை மிக எளிமையாக கையாளும் என்பதில் ஐயமில்லை.

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை

இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் உடனான அட்ரெனோ 508 ஜிபியூ மற்றும் இது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஆனது 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி

15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி

இதன் 15வாட் டர்போசார்ஜர் ஆனது வெறும் 15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குமென் நிறுவனம் கூறியுள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமே, இரட்டை-ஒளி நிலைகளில் வேகமாக போகஸ் செய்யக்கூடிய, இரட்டை ஆட்டோபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட அதன் 12எம்பி+8எம்பி டூயல் ரியர் கேமரா தான்.

இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம்

இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம்

இதன் 12எம்பி கேமராவானது இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம், எப்/ 2.0 மற்றும் 1.4யோஎம் சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மற்றொரு 8எம்பி ரியர் கேமராவானது 120 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ், எப் / 2.2 துளை மற்றும் 1.12யூஎம் பிக்சல் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

16எம்பி செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், ப்ளாஷ் கொண்ட 16எம்பி கேமரா உள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள் பொருள்களையும் அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு வணிக அட்டையை அடையாளம் கண்டு, ஒரு பயனரின் தொடர்புகளுடன் அந்த தகவலை சேர்க்கவும் முடியும்.

பேஸ் பில்டர்ஸ்

பேஸ் பில்டர்ஸ்

இந்திய சந்தையில் ரூ.22,999 /- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ள மோட்டோ எக்ஸ்4 ஆனது, அதன் கேமரா பயன்பாட்டில் உள்ள "பேஸ் பில்டர்ஸ்" ஆனது ஸ்னாப்சாட், இன்ஸ்ட்டாகிராம் போன்ற புகைப்பட பில்டர்களை பயனர்களுக்கு வழங்கும். அளவீட்டில் 148.35 x 73.4 x 7.99 மிமீ, 9.45 மிமீ கேமரா பம்ப் மற்றும் 163 கிராம் எடை கொண்டுள்ளது.

சென்சார்களை பொறுத்தமட்டில்

சென்சார்களை பொறுத்தமட்டில்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் அமேசான் அதன் அலெக்ஸா அனுபவத்தையும் சேர்த்துள்ளது. ஒற்றை சிம் ஸ்மார்ட்போன்செ இதன் சென்சார்களை பொறுத்தமட்டில் கைரேகை ரீடர், கிராவிட்டி, ப்ராக்சிமிட்டி, ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னட்டோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் சென்சார் ஹப் ஆகியவைகளை தன்னுள் கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Moto X4 priced at Rs 22999 has great features, solid design. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot