மோட்டோ எக்ஸ் 4 - அறிமுக தேதி அறிவிப்பு : விலை மற்றும் அம்சங்கள்.!
மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என மோட்டோரோலா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு அனைத்து வலைதளங்களிலும் கசிந்துள்ளது, அதன்படி இந்த மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. மேலும் இந்தய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கைரேகை ஸ்கேனர் :
மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் அனைவரும் எதிர்பார்த்த கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, அதன்பின் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 7.1:
மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications