Home
Mobile

லீக் புகைப்படம் : அட்டகாசமான வடிவமைப்பில் மோட்டோ எக்ஸ்4.!

இக்கருவி ஒரு 16எம்பி செல்பீ கேமராவுடன் பின்பக்கம் 12எம்பி மற்றும் 8எம்பி கேமராக்கள் கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்திருந்தன.

By Muthuraj

கடந்த ஜூன் மாதம் மோட்டோரோலா அதன் எக்ஸ் தொடரின் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை விரைவில் அறிவிக்குமென்ற செய்தி ஆன்லைனில் வெளியானது. அதனைத்தொடர்ந்து இப்போது பெர்லினில் இந்த தொலைபேசியை அறிவிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லீக் புகைப்படம் : அட்டகாசமான வடிவமைப்பில் மோட்டோ எக்ஸ்4.!

இண்டர்நெட்டில் பல மோட்டோ எக்ஸ்4 கசிவுகள் உள்ளன. ஆனால் ஸ்லாஷ்லீக்ஸ்-ன் ஒரு புதிய கசிவு வெளிப்படையாக மோட்டோ எக்ஸ்4 சாதனத்தின் முழு வடிவமைப்பையும் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய லீக்ஸ் தகவலில், நீல நிறத்தில் மிகப்பெரிய அளவில் மற்றும் பின்பக்க இரட்டை கேமரா அமைப்புடன் புகைப்படத்தில் காணப்படுகிறது. இதன் இரட்டை கேமரா அமைப்பில் டூயல் டோன் பிளாஷ் இருப்பதும் தெளிவாக காணப்படுகிறது.

முன்னர் வெளியான கசிவுகள், இக்கருவி ஒரு 16எம்பி செல்பீ கேமராவுடன் பின்பக்கம் 12எம்பி மற்றும் 8எம்பி கேமராக்கள் கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்திருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லீக் புகைப்படம் : அட்டகாசமான வடிவமைப்பில் மோட்டோ எக்ஸ்4.!

கேமரா தொகுதி, பிராண்ட் லோகோ என தொலைபேசியின் பின்பக்கம் கண்ணாடி வடிவமைப்பில் காட்சியளிக்கிறது. படத்தில் கூறப்படும் மோட்டோ எக்ஸ் 4 பார்ப்பதற்கு எஸ்8 போன்றே தெரிகிறது, அதாவது - கேலக்ஸி எஸ்8-ல் காணப்பட்ட அதே விளிம்பு வடிவமைப்பை கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த புகைப்படம் இக்கருவி கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்ற கடந்த லீக்ஸ் செய்தியுடன் முரண்படுகிறது. இதன் மூலம் இக்கருவி அதன் ஹோம் பொத்தானில் கைரேகை சென்சார் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான வதந்திகள் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஐபி68 மதிப்பீட்டை கொண்டு வரலாம், அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்பு அம்சம் கொண்டுருக்கலாம் என்று அர்த்தம்.

லீக் புகைப்படம் : அட்டகாசமான வடிவமைப்பில் மோட்டோ எக்ஸ்4.!

தவிர உலோக வடிவமைப்பு, 3டி கண்ணாடி, கூகுள் அசிஸ்டென்ட், 5.2 அங்குல டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட், மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 3000எம்ஏஎச் பேட்டரித்திறன், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் ஆகிய அம்சங்களும் இக்கருவியில் எதிர்பார்க்கப்டுகிறது.

Best Mobiles in India

English summary
Moto X4 new images leak, show big camera and shiny glass body. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X